தென்மேற்கு பருவமழைத் தொடங்கியதில் இருந்து வடமாநிலங்களில் கணமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. இதனால் மக்கள் ஆற்றில் இறங்க, குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கங்கை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை போலிஸ் ஒருவர் காப்பாற்றியதற்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியில், விஷால் என்கிற இளைஞர் ஆற்றின் கரையோரம் நீரில் இறங்குவதற்கு நின்றுக் கொண்டிந்தார். அப்போது அவர் தடுப்புகள் உடைந்து தண்ணீரில் விழுந்துள்ளார்.
வெள்ளம் அதிகமாக இருந்ததால் நீரின் வேகத்தில் செல்லப்பட்டதை பார்த்த மக்கள், அவரை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டு உள்ளனர்.
ஆனால் ஆற்றில் வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், யாரும் உதவ முன்வரவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸ் அதிகாரி சன்னி, அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். வெள்ளத்தின் எதிர் திசையில் நீந்திச் சென்று, அந்த வாலிபரைக் காப்பாற்ற முயன்றார்.
வெள்ளத்தின் போக்கு அதிகமாக இருந்தாலும், சாமர்த்தியமாக இளைஞரை பிடித்துக் கொண்டு நீந்தி கரைக்கு வந்தார். அவரின் இந்த துணிச்சல் நடவடிக்கையை பார்த்த மக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை உத்தரகாண்ட் காவல்துறை அவர்களது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அதிகாரியின் துணிச்சல் நடவடிக்கையை பலர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.