வைரல்

விடுதலைப் புலிகளை சக்தி வாய்ந்த தீவிரவாத இயக்கம் என விமர்சித்த காஷ்மீர் ஆளுநர் - வலுக்கும் சர்ச்சை

நாட்டின் வளத்தைக் கொள்ளை அடிப்பவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பேசியுள்ளார்.

விடுதலைப் புலிகளை சக்தி வாய்ந்த தீவிரவாத இயக்கம் என விமர்சித்த காஷ்மீர் ஆளுநர் - வலுக்கும் சர்ச்சை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டின் வளத்தைக் கொள்ளை அடிப்பவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நேற்றைய தினம் கார்கில் மற்றும் லடாக் சுற்றுலா விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசுகையில் , “ துப்பாக்கி ஏந்திய சிறுவர்கள் எந்த காரணமும் இன்றி அப்பாவி மக்களையும், பாதுகாப்புத் துறையினரையும், சிறப்பு காவல்துறை அதிகாரிகளை சுட்டு கொல்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன், ஏன் அவர்களை கொல்கிறீர்கள் ?

உங்கள் நாட்டின் வளத்தைக் கொள்ளை அடிப்பவர்களை சுட்டுக் கொல்லுங்கள். இதுவரை காஷ்மீரின் வளங்களை கொள்ளையடித்தவர்கள் யாரையாவது கொன்றிருக்கீர்களா? ” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ நீங்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்த தேசத்தில் எதையும் செய்ய முடியாது. அதுவே வரலாறு உணர்த்தும் உண்மை. மேலும் உலகின் சத்தி வாய்ந்த தீவிரவாத அமைப்பாக செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இன்று முற்றிலும் இல்லாமல் போனது.

விடுதலைப் புலிகளை சக்தி வாய்ந்த தீவிரவாத இயக்கம் என விமர்சித்த காஷ்மீர் ஆளுநர் - வலுக்கும் சர்ச்சை

ஜம்மு-காஷ்மீர் முழுவதுமே 250 தீவிரவாதிகள்தான் இருப்பார்கள், அவர்களில் 100ல் இருந்து 125 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒரு என்கவுண்டர்க்கு மட்டும் அனுமதிக் கொடுத்தால் அவர்கள் முழுவதும் அழிந்துவிடுவார்கள். அதற்கு இரண்டு நாட்கள் போதும்” என அவர் பேசி இருந்தார்.

அவரின் இந்தப் பேச்சு தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்களை திரும்ப பெறவேண்டும். மக்கள் மத்தியில் பேசும் போது விடுதலை புலிகள் அமைப்பை சத்தி வாய்ந்த தீவிரவாத அமைப்பாக சொல்வது கண்டிக்கத்தது என அவரின் பேச்சைக் கண்டித்து பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories