சமூக வலைதளங்கள் கோலோச்சும் தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப் இல்லாமல் ஒரு நாளை கடப்பதை பெரும் சவாலாகவே பார்க்க முடிகிறது. அதற்கு ஏற்றார் போல் அவ்வப்போது பல வித அப்டேட்களும் வாட்ஸ் அப்-க்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் மேலும் பல வசதிகளை அளிக்க முன்வந்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். புதிதாக அளிக்கப்பட உள்ள அப்டேட்களின் விவரங்கள்:
Finger Print Censor: பெரும்பாலானோர் ஸ்கிரீன் லாக் மட்டுமில்லாமல் சில முக்கியமான தரவுகள் உள்ள செயலிகளையும் லாக் செய்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதிலும் தற்போதுள்ள அனைத்து ஸ்மார்ட்ஃபோன்களிலும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளதால் பேட்டர்ன் லாக்கை மக்கள் கைவிட்டு ஃபிங்கர் பிரிண்டுக்கு தாவியுள்ளனர். தற்போது அது வாட்ஸ் அப்-க்கும் கொடுக்கப்பட உள்ளது. ஏற்கெனவே ஆப்பிள் இயங்குதளத்துக்கு மட்டும் அளிக்கப்பட்ட இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு பயன்பாட்டுக்கும் வரவுள்ளது.
Ranking of Contacts: வாட்ஸ் அப்பில் பின் செய்யப்பட்ட குழுக்களை தவிர அண்மையில் சாட் செய்தவர்களின் காண்டாக்ட் மேலே இருக்கும். ஆனால் தற்போது கொண்டுவரப்பட உள்ள வசதியின் மூலம், எந்த நபரிடம் அதிகம் சேட் செய்திருக்கிறோமோ அவர்களது சாட் மேலே முதலாவதாக வரும்.
Frequently Forwarded: சமூக வலைதளங்களில் வரும் மெசேஜ்களை உண்மை தன்மை அறியாமல் ஃபார்வர்ட் செய்வதில் வல்லவர்கள் நம் மக்கள். அதிலும் இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் வதந்தியை பரப்புவதையே சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதனால் தற்போது ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முடியாது என இருந்த நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை கெடுபிடியாக்கியுள்ளது. அதில், ஒரு மெசேஜ் பல முறை ஃபார்வர்டு செய்யப்பட்டிருந்தார் அதனை குறிப்பிடும் வகையில் Frequently Forwarded என சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hide Muted Status: வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைப்பதற்கென்று தனி வசதி கொண்டு வரப்பட்ட நாள் முதல் அதில் ஒரு நாளைக்கு பல்வேறு ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதனை சிலர் மியூட் செய்தும் அவை வரிசையின் கடைசியில் இருக்கும்.
அதிலும் சென்று ஸ்டேட்டஸை காணும் வசதி இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் மியூட் செய்த ஸ்டேடஸை முழுவதுமாக மறைக்கவும் செய்யும் வகையில் புது அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது Beta வெர்ஷனில் மட்டும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Share Whatsapp Status: ஸ்டேட்டஸில் வைக்கப்படும் வீடியோக்களை சாட் பாக்ஸ் உள்ளே சென்று வீடியோவை அனுப்பும் வசதியை குறைத்து நேரடியாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக், ஜிமெயில் என பலவற்றிருக்கும் ஷேர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dark Mode: ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள ஒவ்வொரு செயலிகளுக்கும் அவ்வப்போது டார்க் மோடு வசதி கொடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ட்விட்டர், பேஸ்புக் மெசேஞ்சர் செயலிகளுக்கு டார்க் மோடு அளிக்கப்பட்டுள்ளது. அது போல், வாட்ஸ் அப்-க்கும் அளிக்கப்பட உள்ளது. டார்க் மோடை பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு அதிக ஒளியை கொடுப்பதை தவிர்க்கலாம்.
QR Mode: வாட்ஸ் அப்பில் QR mode வசதி அளிக்கப்படுவதன் மூலம், வாட்ஸ் அப்-க்கு என தனியாக எண்களை பயன்படுத்துவர்களை தொடர்பு எண்ணை ஸ்கேன் செய்தால் ஆட்டோமேட்டிக்காக வாட்ஸ் ஆப் சேவ் செய்து விடும்.
இப்படி ஏகப்பட்ட புதிய புதிய வசதிகளை தனது இந்த அப்டேட்டில் கொண்டு வந்துள்ளது வாட்ஸ்-அப். இதனால் பயனாளர்கள் இன்னமும் சிறப்பாக இந்த செயலியைப் பயன்படுத்த முடியும். இந்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.