அமெரிக்காவின் புகழ் பெற்ற செய்தி இதழ் 'டைம்' ஆகும். இந்த இதழில் இந்த மாதத்திற்கான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'பிளவுவாதிகளின் தலைவர்' என்ற பெயரில் அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் பிரபலமான 'டைம்' நாளிதழுக்கு உலகமெங்கும் 2 கோடிக்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். டைம் இதழில் சத்தி வாய்ந்த தலைவர்கள் என்று வெளிவரும் பட்டியலில் தன்னுடைடைய பெயர் வராதா என்று எங்கும் பலர் உண்டு. இந்த இதழ் 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறப்பு நேர்காணல் நடத்தியது. அப்போது வெளிவந்த கட்டுரையில் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக அதிக விஷயங்கள் இடம் பெற்றிருந்தது.
2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரது படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு, மிகப்பெரும் சக்தியாக அவர் உருவாகிக் கொண்டு இருப்பதாக இந்த இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை எட்டியுள்ள நிலையில், டைம் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
இந்த கட்டுரையில், அவர் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவின் மிக முக்கிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில சுயாட்சி, சிறு நிறுவனம், பத்திரிக்கை சுதந்திரம், பல்கலைக்கழகங்கள் என நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் முற்போக்குவாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிக அளவில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
2014ம் ஆண்டு தேர்தலின் போது பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை மோடி முன்வைத்தார். ஆனால் அவரின் கருத்துக்கள் ”ஜூம்லா, மாயாஜாலம்” போல் நடக்காமல் போலியாகப் போனது. மதம் சார்ந்த தேசியத்தை, மதச்சார்பற்றத் தேசத்தில் மோடி அரசு உருவாக்கி விட்டது.
2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவுக்கான ஒரு மீட்பர் போல பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், மறுபடியும் தேர்தலை சந்திக்க கூடிய, ஒரு சாதாரண அரசியல்வாதி போலத்தான், மோடியும் மக்களால் பார்க்கப்படுகிறார்.
என இவ்வாறு டைம் இதழ் தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளது.