Videos

‘ஓட்ஸ்’ : அதில் ஒன்றும் இல்லை..! அதை சாப்பிட்டு உடல் எடை குறைத்தவரும் இல்லை - அதிர்ச்சித் தகவல் !

ஓட்ஸ் சப்பிட்டால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘ஓட்ஸ்’ : அதில் ஒன்றும் இல்லை..! அதை சாப்பிட்டு உடல் எடை 
குறைத்தவரும் இல்லை - அதிர்ச்சித் தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அன்றாடம் நாம் சாப்பிடும் காலை உணவுகளிலே மிகச் சிறந்த காலை உணவாக இருப்பது இட்லியும், பொங்கலும்தான். இந்த உணவுகள் குழந்தைகளுக்கும், வளரும் பிள்ளைகளுக்கும் தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் கொடுக்ககூடியவை.

ஆனால், பிரெட் சாண்ட்விச், ஓட்ஸ் ஃபிளேக்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ் என சாப்பிடும் அந்நிய உணவு முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். இந்த உணவு முறை சரியா? உண்மையில் இவை உடலுக்கு தேவையான சத்துக்களை தருமா? உடல் எடையைக் குறைக்குமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

‘ஓட்ஸ் சாப்பிட்டு உடல் இளைத்தோம் என ஆதாரம் எங்கும் இல்லை’ என்கின்றனர் மரபு வழி மருத்துவர்கள். ஆனால், கிராமங்களிலும் கூட தற்போது ஓட்ஸ் கிடைக்கிறது. உண்மையில், ஓட்ஸில் சத்துகள் இருக்கிறதுதான். ஆனால், நமக்கு இங்கு கிடைக்கின்ற ‘ஓட்ஸில், ஒன்றும் இல்லை’ என்பதுதான் மறைக்கப்பட்ட உண்மை. நமக்கு வருவதெல்லாம், ‘ஓட்ஸ் அவல்’ மட்டுமே என்று மருத்துவர்கள் அதிர்ச்சி கிளப்புகின்றனர்.

நாம் உண்பது உண்மையில் ஓட்ஸ் அல்ல?

ஓட்ஸை 100 டிகிரியில் வேக வைத்து, 80-100 டன் இயந்திரந்தில் இடித்து, தட்டையாக்கி, 200 டிகிரியில் அதில் உள்ள திரவத்தை எடுத்த பின், வெளிவருகின்ற சக்கையை, 6 மாதம் கெட்டுப்போகாமல் இருக்க சோடியம் நைட்ரேட், சோடியம் பென்ஸோயேட், சுவைக்காக மோனோ சோடியம் குளுட்டமேட், காற்றில் உள்ள ஈரத்தை ஓட்ஸ் உறிந்து நமத்துவிடக் கூடாது என்பதற்காக ‘சிலிக்கேட்’ உப்பு போன்ற பதப்படுத்திகள் சேர்க்கப்பட்டு அழகான கவர்களிலும் அட்டைப்பெட்டிகளிலும் விற்கப்படுகிறது. இப்படித்தான் ஓட்ஸூம் கார்ன் ஃபிளேக்ஸூம் தயாரிக்கப்பட்டு நம் தட்டுக்கு வருகின்றன.

இப்படிப்பட்ட சக்கையை தான் நமக்கு ஓட்ஸ் என்று விற்கிறார்கள். இதை சாப்பிடுவதால் வயிற்றுப் புண்கள் வரலாம். மிக மோசமான நிலையில், புற்றுநோய் கூட வர வாய்ப்பிருக்கிறது. நமது உடல் நலனில் அக்கறை கொள்வதாக பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களுக்கு நாமும் இரையாகப் போகிறோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய தேவையுள்ளது.

banner

Related Stories

Related Stories