தமிழ்நாடு

“பாஜகவை கூண்டோடு ஓரங்கட்டி விட்டோம்.. நாங்க ஏன் டென்ஷன் ஆகணும்?” - தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

“பாஜகவை கூண்டோடு ஓரங்கட்டி விட்டோம்.. நாங்க ஏன் டென்ஷன் ஆகணும்?” - தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் வருகின்ற 28-ம் தேதி அன்று குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதையொட்டி அதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு பந்தக்கால் நாட்டினார். மேலும் இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

இந்த கோவிலானது கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தாமரை எங்கையாவது மலர்ந்தால் சேகர்பாபுவிற்கு கோபம் வருகிறது? என்ற பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்விக்கு பதிலளிக்கையில்,

“பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் கூண்டோடு ஓரம் கட்டி விட்டோம். எங்களுக்கு டென்ஷன் இல்லை. நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக எட்டு காலு பாய்ச்சலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் குறைகளையும் மக்கள் தேவைகள் நேரடியாக சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 என்ற இலக்கை நோக்கி திமுக பயணத்தைக் மேற்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு டென்ஷன் அல்ல எங்களுக்கு எதிர்த்து களத்தில் இருப்பவர்கள் தான் டென்ஷன்.

“பாஜகவை கூண்டோடு ஓரங்கட்டி விட்டோம்.. நாங்க ஏன் டென்ஷன் ஆகணும்?” - தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சிதம்பரம் கோவிலை பொறுத்த வரைக்கும் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் கேட்டு மேற்கொள்ள இருக்கிறோம். திருக்கோவிலில் பொருத்தவரைக்கும் சட்டங்கள் என்ன சொல்கிறது? எந்த திருக்கோவிலாக இருந்தாலும் புகார் பெறப்பட்டால் அதன் மீது விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

கனக சபை வருகின்ற மக்களை தடுத்து நிறுத்துவதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு அரசாணை பிறப்பித்தது அந்த அரசாணை எதிர்த்து ஏற்கனவே தடை செய்யக்கூடாது என உத்தரவு பெறப்பட்டது.

தீச்சர்களோடு போராட வேண்டிய அவசியம் இல்லை பக்தருக்காக அவர்களுக்கு அவமரியாதையும் தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றாத சூழ்நிலையில் நிச்சயம் அரசு தலையிட்டும் நீதிமன்றமும் வரவேற்கும் திருக்கோவில் என்பது பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக தான் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட தரிசனம் செய்வதற்கு அல்ல பொதுமக்களுக்கு கேடு விளைவிக்குமானால் பொதுமக்கள் உடைய தரிசனத்தில் இடர்பாடுகள் ஏற்பட்டால் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து திருக்கோவில்களிலும் குடமுழுக்கு சமயத்தில் தமிழில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது” என்றார்.

banner

Related Stories

Related Stories