தமிழ்நாடு

மருத்துவத்துறை மீது களங்கம் ஏற்படுத்த பார்க்கும் பழனிசாமி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!

மருத்துவ துறை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை தெரிவித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறை மீது களங்கம் ஏற்படுத்த பார்க்கும் பழனிசாமி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் டெங்கு உயிரிழப்பு 65ஆக இருந்ததையும், தற்போது டெங்கு உயிரிழப்பு 8 ஆக குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழகத்தில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில், மருத்துவத் துறையில் 18 ஆயிரத்து 460 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரியிலும் தகுதி பெற்ற நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சு தெரிவித்தார்.

வரும் ஜனவரி 27ம் தேதி மருத்துவத் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ துறை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories