தமிழ்நாடு முழுக்க பருவமழை எதிரொலியாக கனமழை பெய்து வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகப்படியான மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. அவ்வரிசையில், நேற்று ராமேசுவரம் துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வீசிய பலத்த சூறைக்காற்றில் ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது.
மேலும் நங்கூரம் அருந்து விசைப்படகுகள் தரை தட்டியுள்ளது. இதனை மீனவர்கள் இரவோடு இரவாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, ஏராளமான விசைப்படகு மீனவர்களுக்கு 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராமேசுவரம் தீவு பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வருகிறது என்பதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.