தமிழ்நாடு

திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !

திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தீபஒளி திருநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " திருச்செந்தூரில் சூரசம்ஹார தினத்தன்று ஆறு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல கந்த சஷ்டி விழா 2 தேதியில் இருந்து 6 தேதி வரை தினம் தினம் ஒரு லட்சம் என்ற விதத்தில் 12 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். அவ்வாறு கூடும் சூரசம்ஹார நிகழ்வை திருச்செந்தூரில் பக்தர்கள் கண்டு களிக்க எல்.இ.டிகள் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன .

திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !

பாதுகாப்பு கருதி கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் போடப்பட்டுள்ளன. கந்த சஷ்டி திருவிழா முடிந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா போது பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவிற்கு வரும் மாற்றத்திறனாளிகள்,70 வயது மேல் உள்ள முதியவர்கள் சிறப்பு வழி அமைக்கப்பட உள்ளது . கந்த சஷ்டி விழாவில் பங்கேற்பவர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பதற்கு 18 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் ஆங்காங்கே நிழல் கொட்டைகள் அமைக்கப்படும். அறுபடை வீடுகளிலும் இசை கலைஞர்களால் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற உள்ளது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories