தமிழ்நாடு

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிணை மனு தள்ளுபடி! : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிணை மனு தள்ளுபடி! : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ என்கிற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, அந்நிதி நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிணை கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் இரண்டுமுறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தேவநாதன் மற்றும் குணசீலன் ஆகியோர் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிணை மனு தள்ளுபடி! : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி. முனியப்பராஜ் ஆஜராகி, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, இருவரையும் பிணையில் விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, பொது மக்களின் பணம் 600 கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி இது என்றும், தேவநாதன் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் ஆவதற்கு முன்பு நிதிநிலைமை சீராக இருந்தது. ஆனால், அவர் இயக்குநர் ஆன பின்பு மோசமாகிவிட்டதாகவும் தெரிவித்தார். பொருளாதார குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி தனபால், தேவனநாதன் மற்றும் இயக்குநர் குணசீலன் ஆகியோரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories