தமிழ்நாடு

நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை! : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!

நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள  கடற்கரைகளிலும் மரப்பாதை! : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று களைப்பாற ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் மரப்பாதை அமைக்கப்பட்டது.

இதன் வழி, பெரும்பான்மையானோர் பயன்பெற்றதையடுத்து, மெரினாவை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள  கடற்கரைகளிலும் மரப்பாதை! : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!

இதனை நேரில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணி டிசம்பரில் முடிவுற்று, தமிழர் திருநாள் முதல் பயன்பாட்டிற்கு வரும்.

டிசம்பர் 3 இயக்கம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்கம் மெரினா, பெசன்ட் நகரை அடுத்து மற்ற நாகை உள்ளிட்ட முக்கிய கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையிலும் மரப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

அக்கோரிக்கையை ஏற்று, மற்ற கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories