தமிழ்நாடு

மதுரை கனமழை : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை !

மதுரை கனமழை : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் ஒரே நாளில் 10 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அதிலும் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகார்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்களை அனுப்பி வைத்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை கனமழை : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை !

இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், ”மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்களைஅனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories