தமிழ்நாடு

நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து அவசரமாக வெளியேறிய ஊழியர்கள்: நடந்தது என்ன? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து அவசரமாக வெளியேறிய ஊழியர்கள்: நடந்தது என்ன? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை அமைந்துள்ளது. 10 தளங்கள் கொண்ட இந்த மாளிகையில் அரசு துறைகளில் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் என 3,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்..

இந்த நிலையில், இன்று காலை 11:30 மணியளவில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் ஊழியர்கள் பணியாற்றும் இடத்தில், தரைத்தளத்தில் உள்ள 20- க்கும் மேற்பட்ட டைல்ஸ்களில் விரிசல் ஏற்பட்டு திடீரென்று வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சத்தம் கேட்டு, கட்டடத்திற்கு ஏதோ ஆபத்து என அரசு ஊழியர்கள் பதற்றம் அடைந்து உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். முதல் தளத்தில் ஏற்பட்ட டைல்ஸ் விரிசல் குடித்த தகவல் மற்ற தளத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 10 மாடியில் உள்ள அரசு ஊழியர்களும் உடனடியாக அவசர அவசரமாக மாளிகையில் இருந்து வெளியேறினர்.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து அவசரமாக வெளியேறிய ஊழியர்கள்: நடந்தது என்ன? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் இருந்து வெளியேறிய அரசு ஊழியர்கள் அனைவரும் எதிரில் உள்ள புல்வெளி பகுதியில் கூடினர். பின்னர் தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு டைல்ஸ் உடைந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதித்தன்மையுடன் உள்ளது. கட்டட பராமரிப்பின்போது முதல் தளத்தில் உள்ள வேளாண்துறை அலுவலக டைல்ஸில் ஏற்பட்ட விரிசலை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். இதனால் அலுவலர்கள் அச்சப்படத் தேவையில்லை. 14 வருடத்துக்கு முன்னர் போடப்பட்ட டைல்ஸ்களை மாற்றி புதிய டைல்ஸ்களை பதிக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories