தமிழ்நாடு

“11 லட்சம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!” : ‘முதலமைச்சர் கோப்பை’ நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் உரை !

“11 லட்சம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!” : ‘முதலமைச்சர் கோப்பை’ நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் உரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டு வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக, ஆண்டுதோறும் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 4 ஆம் நாள் முதல் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று இன்றுடன் (அக்டோபர் 24) நிறைவடைந்துள்ளது.

இதற்கான நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்பட்டு, சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இவ்விழாவிற்கு, தலைமை பொறுப்பு வகித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் சுமார் 1 மாத காலம் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அடுத்தகட்ட வெற்றி பயணம் சிறப்பாக தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் கோப்பை 2023 விளையாட்டு போட்டிகளில் 6.71 லட்சம் பேர் பங்கேற்றனர். நடப்பாண்டில், அந்த எண்ணிக்கை 11.56 லட்சமாக உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றி கொண்டிருக்கிறோம். அதற்கான உதாரணம் தான், ‘முதலமைச்சர் கோப்பை!’

“11 லட்சம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!” : ‘முதலமைச்சர் கோப்பை’ நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் உரை !

தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என்றும் கூறும் அளவிற்கு, ‘முதலமைச்சர் கோப்பை’விளையாட்டுப் போட்டிகளை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டு தொடரில் அதிகப்படியான விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வதிலும், அதிக மதிப்பிலான பரிசுகள் வழங்குவதிலும் No.1 மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டை extracurricular activities ஆகவோ, அல்லது Co-curricular activities ஆகவோ பார்க்கவில்லை. அவர், விளையாட்டை Main curriculum (முதன்மை பாடத்திட்டம்) ஆக தான் பார்க்கிறார்.

ஆகவே தான், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும், விளையாட்டுத்துறையின் மீது ஆர்வம் கொள்ள செய்வதற்காக, தமிழ்நாடு அரசின் சாரில், மாநில அளவிலான போட்டிகள் மட்டுமல்லாமல், தேசிய, சர்வதேச போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

கிராம அளவில் விளையாட்டுத்துறை சாதனையாளர்களை தயார்படுத்த வேண்டும் என்று “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம்” கொண்டுவரப்பட்டு, ரூ. 86 கோடி செலவில், தமிழ்நாட்டின் அனைத்து (12,525) ஊராட்சிகளுக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories