தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள் என்ன ? - முழு விவரம் !

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள் என்ன ? - முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.298.02 கோடி செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.365.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.146.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 16,031 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.10.2024) நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 298 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 134 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 140 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,031 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

=> நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல் :

சட்டத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 101 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நாமக்கல்லில் 19 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், வேலூர் பேரூராட்சி, கந்த நகரில் 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவிலும், எருமைப்பட்டி பேரூராட்சியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்செங்கோடு நகராட்சி, சந்தைப்பேட்டையில் 4 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவிலும் புதிய வாரச் சந்தைகள்;

திருச்செங்கோடு நகராட்சி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வார சந்தை முன்புறத்தில் 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் கடைகள், என 29 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் 5 முடிவுற்ற பணிகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் முள்ளுக்குறிச்சி ஊராட்சியில் 4 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் 300 பழங்குடியினர் மாணவர் தங்கும் விடுதிக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிளாப்பாளையம், முகாசி கிளாப்பாளையம், கீழக்கடை, நவலடிப்பட்டி, பாலநாயக்கன்பாளையம், வெங்கமேடு, முத்துக்காளிப்பட்டி மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி 2 கோடியே 12 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

வேலகவுண்டம்பட்டி, எர்ணாபுரம், தளிகை, வீசாணம், கோதூர் மற்றும் ஏளூர் ஆகிய ஊராட்சிகளில் 55 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் நியாய விலைக் கடைகள்;

பழையபாளையம், வடவத்தூர், வரகூர், வள்ளிபுரம் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கிராம ஊராட்சி செயலகங்கள்;

பழையபாளையம், மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சிகளில் 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தொழிற்கூடங்கள்; எஸ். பழையபாளையம் ஊராட்சியில் 14 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் தானியக் கிடங்கு சேமிப்பு கட்டடம்;

செவிந்திபட்டி, மொரங்கம், செண்பகமாதேவி, அணியாபுரம், கொமரிபாளையம் ஊராட்சியில் சின்னதம்பிபாளையம் மற்றும் சங்கரம்பாளையம் உள்ளிட்ட 48 இடங்களில் 6 கோடியே 41 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள் என்ன ? - முழு விவரம் !

நல்லாகவுண்டம்பாளையத்தில் 14 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் உணவு தானியக் கிடங்கு கட்டடம்; கருங்கல்பட்டி முதல் மேட்டுப்பட்டி சாலையில் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே 4 கோடியே 34 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம்;

கோட்டபாளையம், திண்டமங்கலம், கொமரபாளையம், தொட்டிபட்டி, ஏளூர் மற்றும் எஸ்.இறையமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 55 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் ஊராட்சி மன்றக் கட்டடங்கள்;

மொரங்கம், வீரணம்பாளையம், செல்லப்பம்பட்டி, ராமதேவம் ஆகிய ஊராட்சிகளில் 51 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவில் பொது விநியோகக் கட்டடங்கள்;

பெரமாண்டம்பாளையம், மணப்பள்ளி, செங்கப்பள்ளி, காளிபாளையம், மாடகாசம்பட்டி, கூடச்சேரி, அரசபாளையம் ஆகிய ஊராட்சிகளில் 84 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் வேளாண்மை சேமிப்பு கிடங்குகள்;

திண்டமங்கலம் ஊராட்சி, அப்பிநாய்க்கன் பாளையத்தில் 6 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம்; வேட்டாம்பாடி உயர்நிலைப் பள்ளியில் 5 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் பொருள் வைப்பறையுடன் கூடிய சமையல்கூடம்;

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, குமரன் நகர் ஓடையின் குறுக்கே 4 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவிலும், களியனூர் ஊராட்சி, மணல் தோப்பு ஓடையில் 1 கோடியே 97 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவிலும் உயர்மட்ட பாலங்கள்;

நல்லூர் ஊராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்; பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி, முள்ளம்பட்டி மற்றும் தாத்தையங்கார்பட்டி ஆகிய இடங்களில் 1 கோடியே 35 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள்; திருமலைப்பட்டி ஊராட்சியில் 35 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம்;

தத்தாதிரிபுரம் ஊராட்சி, சேவாகவுண்டத்தில் உள்ள பொது விநியோக விற்பனை நிலையக் கூடத்தில் 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் தானிய கிடங்கு; காக்காவேரி ஊராட்சியில் 12 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் நியாய விலைக் கடை மற்றும் பூசாரிபாளையத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கட்டடம், என 27 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் 99 முடிவுற்ற பணிகள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், திம்மநாய்க்கன்பட்டி, காரைகுறிச்சிபுதூர், இராமாபுரம், வெப்படை, ஆர்.புதுப்பட்டி, ஆண்டாபுரம், சிங்கிலியன்கோம்மை, போடிநாய்க்கன்பட்டி, சந்திரசேகரபுரம், சின்னமுதலைப்பட்டி ஆகிய 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 கோடியே 91 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள்;

பால்வளத் துறை சார்பில் நாமக்கல்லில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 2 கோடியே 95 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய நிருவாக அலுவலகக் கட்டடம், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிப்பாளையம் வட்டங்களில் 34 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் பால் குளிரூட்டும் நிலையங்கள், என 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவிலான 3 முடிவுற்ற பணிகள்;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அய்யம்பாளையத்தில் 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும், சேந்தமங்கலம், நடுகோம்பையில் 53 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விவசாயிகளுக்கான கள கண்காணிப்பு மற்றும் தகவல் மையக் கட்டடம், என 3 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகள்;

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள் என்ன ? - முழு விவரம் !

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மோகனூரில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 33 இலட்சம் ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்பு கட்டடம்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சேந்தமங்கலம் வட்டம், பேளூக்குறிச்சி ஊராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மிளகு பதப்படுத்தும் மையம்;

நாமக்கல் வட்டம், வசந்தபுரம் ஊராட்சியில் 84 இலட்சம் ரூபாய் செலவில் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையம்;

பரமத்தி வட்டம், வீராணம்பாளையம் ஊராட்சியில், 34 இலட்சம் ரூபாய் செலவில் உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்பு கூடம்;

நாமக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், என 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகள்;

கூட்டுறவுத் துறை சார்பில் திருச்செங்கோடு வட்டத்தில் 13 இலட்சம் ரூபாய் செலவில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு;

கபிலர்மலை வட்டத்தில் 23 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் வேளாண் வணிக மையம் மற்றும் எண்ணெய் பிழியும் அலகு, 12 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு மற்றும் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் எண்ணெய் பிழியும் கிடங்கு;

நாமக்கல் மாநகராட்சியில் 19 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் மிளகு பதனிடும் அலகு, என 77 இலட்சம் ரூபாய் செலவில் 5 முடிவுற்ற பணிகள்;

நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலை அலகின் கீழ் 87 கோடி ரூபாய் செலவில் நிலம் எடுப்பு மற்றும் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் 25 கோடி ரூபாய் செலவில் அணுகு சாலை, என 112 கோடி ரூபாய் செலவில் 2 முடிவுற்ற பணிகள்;

- என மொத்தம் 298 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 134 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

=> நாமக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் :

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் 154 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 57 புதிய திட்டப் பணிகள்;

பால்வளத் துறை சார்பில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 89 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன பால்பதன ஆலை நிறுவும் பணி;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் 62 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 64 புதிய திட்டப் பணிகள்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வேலூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் விநியோகத் திட்டங்களை மேம்படுத்தும் பணி;

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள பிரதான குடிநீர் இணைப்பு குழாய்களை 6 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றியக்கும் பணி;

வேலூர் பேரூராட்சி, கார் தெரு பகுதி மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களில் 3 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகளை மேம்பாட்டுப் பணி;

அத்தனூர், எருமப்பட்டி, சீராப்பள்ளி, காளப்பநாய்க்கன்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 5 கோடியே 1 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணி;

சேந்தமங்கலம் பேரூராட்சியில் 1 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாரச் சந்தை அமைக்கும் பணி;

பரமத்தி பேரூராட்சி பகுதியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் கட்டும் பணி;

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள் என்ன ? - முழு விவரம் !

நாமக்கல் மாநகராட்சியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி, என 50 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகள்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டத்தில் 1 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமகிரிப்பேட்டையில் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இராசிபுரத்தில் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் கட்டும் பணி, என 5 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகள்;

மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் நாமக்கல் வட்டாரம், கோனூர் கிராமத்தில் 3 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் கட்டும் பணி;

பள்ளிக் கல்வித் துறை சார்பில் எலச்சிபாளையம் வட்டம், திம்மராவுத்தம்பட்டி மற்றும் குமரமங்கலம் ஆகிய இடங்களில் 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பொது நூலகக் கட்டடங்கள்;

- என மொத்தம் 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 140 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

=> நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இ-பட்டா மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா; ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் மற்றும் ஆணைகளை வழங்குதல், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 676 குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பயிர்க்கடன், மத்திய காலக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கான கடன்;

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக்கருவி, தையல் இயந்திரம் மற்றும் திறன் பேசி; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தமிழ்நாடு நவீன பாசனமயமாக்கல் திட்டம், நுண்ணீர்ப்பாசன திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகள்;

தோட்டக்கலைத் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி பகுதி மேம்பாடு-ஒருங்கிணைந்த பண்னையம் மற்றும் வேளாண் இயந்திரமாக்கல் துணை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகள்;

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், துணை வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், சோலார் பம்ப்செட், பழைய மின்மோட்டார் மாற்றும் திட்டம், சூரிய கூடார உலர்த்தி, பவர் வீடர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம், சோலார் டிரையர் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு உதவிகள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குதல், வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் தற்காலிக இயலாமை ஓய்வூதியம்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், விபத்து மரண உதவித் தொகை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்குதல், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 16,031 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், வி.எஸ். மாதேஸ்வரன், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. பொன்னுசாமி, பி. இராமலிங்கம், இ.ஆர். ஈஸ்வரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories