தமிழ்நாடு

ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி... முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு !

சேலத்தில் ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.

ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி... முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொத்திகுட்டை ஏரியில் துணி துவைக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

“​சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த (20.10.2024) அன்று நண்பகல் 12.00 மணியளவில் வீரக்கல் கிராமம், வீரக்கல் புது காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் சிவநந்தினி (வயது 20), மற்றும் மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் துணிதுவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

​இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”

banner

Related Stories

Related Stories