தமிழ்நாடு

பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு அட்டவணை! : அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு அட்டவணை! : அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு பள்ளி மாணவர்கள், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு திரும்பிய நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையையும், தேர்வு முடிவு நாட்களையும் வெளியிட்டார்.

அவர் குறிப்பிட்டவதாவது,

“10ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வு, பிப்ரவரி 22ஆம் நாள் முதல் 28 வரை நடைபெறும்.

11ஆம் வகுப்பிற்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 15ஆம் நாள் முதல் 21 வரை நடைபெறும்.

12ஆம் வகுப்பிற்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 7ஆம் நாள்முதல் 14 வரை நடைபெறும்.”

பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு அட்டவணை! : அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!
பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு அட்டவணை! : அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!
பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு அட்டவணை! : அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

“10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறும்.

11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ஆம் நாள் தொடங்கி மார்ச் 27 வரை நடைபெறும்.

12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 3ஆம் நாள் தொடங்கி 25 வரை நடைபெறும்.”

“10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 19ஆம் நாளும், 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவு மே 9ஆம் நாளும் வெளியாகும்.”

banner

Related Stories

Related Stories