தமிழ்நாடு

“மனசாட்சியோடு பேசத் தயாரா ?” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி !

“மனசாட்சியோடு பேசத் தயாரா ?” -  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் தலித்கள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக போலி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பீகார், ஜார்க்கண்ட உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு சென்று வந்தவர். அங்கும் - இங்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பதனை மனசாட்சியோடு பேசத் தயாராக இருக்கிறீர்களா? என்று ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியது வருமாறு :

“தமிழ்நாட்டில் கமலாலயத்துக்கு போட்டியாக ஒரு இடம் உள்ளது என்றால், அது ராஜ்பவன்தான். தமிழ்நாடு ஆளுநர் ரவி, தன் பொறுப்பை மறந்து ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்பவர் ஒன்றிய - மாநில அரசுக்கு இடையில் பாலமாக இருந்து நல்ல உறவை உருவாக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் அப்படி இல்லை. நீட் தேர்வுக்கு PRO போல ஆளுநர் செயல்படுகிறார்.

காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில் இருப்பது பற்றி பேசியுள்ளார். சென்னை மாநகராட்சி சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. அதிகம் குப்பை சேரும் மெரினாவை கூட முழுவதும் சுத்தம் செய்யும் ஆட்சியாக தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.

“மனசாட்சியோடு பேசத் தயாரா ?” -  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி !

மதுபாட்டில் தொடர்பாக பாதுகாப்பு குறைவு என சொல்லி கொண்டே இருப்பது தவறு. காந்தி மண்டபத்தில் மதுபாட்டில் இருந்தது தனக்கு வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. மது விலக்குக்கு ஆதரவான அரசு தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு.

மதுவை ஒழிக்க, தமிழ்நாடு அரசால் மட்டும் முடியாது. இந்தியா முழுவதும் ஒன்றிணைந்து பாலிசி கொண்டு வந்தால் தான் முடியும். மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் அரசு நமது அரசு. அனைத்து மாநிலங்களும் சேர்ந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும். அதை ஒன்றிய அரசுதான் கையில் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் கொண்டு வர சாத்தியம் இல்லை.

மதுஒழிப்பை கொண்டு வர தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. வருங்காலத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, அனைத்து மாநில அரசுகளுடனும் ஆலோசித்து மது ஒழிப்பு தீர்மானத்தை கொண்டு வர முயற்சிப்போம். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இங்கிருந்து கொண்டு ஆளுநர் அரசியல் செய்கிறார். ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று காரணம் இல்லாமல் கூறவில்லை. அவர் செய்யும் குற்றச்சாட்டுகளை கூறிதான் பதவி விலக வலியுறுத்துகிறோம்.

“மனசாட்சியோடு பேசத் தயாரா ?” -  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி !

தமிழ்நாட்டை போல சகோதரத்துவத்துடன் இருக்கும் மாநிலம் இந்தியாவில் இல்லை. தமிழ்நாட்டில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டை சுற்றி அனைத்து மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுவதால்தான், இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இந்த அரசு யாருக்கு உறுதுணை இல்லை; யாரையும் ஊக்கப்படுத்துவதும் இல்லை.

தமிழ்நாட்டில் தலித்கள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக போலி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பீகார், ஜார்க்கண்ட உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு சென்று வந்தவர். அங்கும் - இங்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பதனை மனசாட்சியோடு பேசத் தயாராக இருக்கிறீர்களா?

தமிழ்நாட்டைப் போல சகோதரத்துவம் நிறைந்த மாநிலம் இந்தியாவிலேயே இல்லை. இங்குதான் சாதி, மதம் என்று பாராமல் அனைவரும் சகோதரர்கள் போல் பழகி வருகின்றனர். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதால்தான், இங்கு தொழில் முதலீடுகள் எல்லாம் வருகின்றன. தலித்களை பிற சமூகத்தினர் தாக்குவதாக செய்திகள் வெளியாவது முற்றிலும் வதந்தியே” என்றார்.

banner

Related Stories

Related Stories