தமிழ்நாடு

”உயர்மட்ட 6 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” : நிதின்கட்கரியிடம் வலியுறுத்திய அமைச்சர் எ.வ.வேலு!

உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

”உயர்மட்ட 6 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” : நிதின்கட்கரியிடம் வலியுறுத்திய அமைச்சர் எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன. அத்தகைய பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து, பணிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்கள் தலைமையில் செப்.30 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கு பெற்றார்.

தொடக்கத்தில், 13.09.2024 அன்று திருச்சிக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசின் நிதியுதவியுடன் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ளது என்று பாராட்டியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஒன்றிய அமைச்சர், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், ஒன்றிய அமைச்சர், சில திட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் திட்டங்கள் முடிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) மற்றும் தேசிய நெடுஞ்சாலை (National Highway) பிரிவு மூலம் இந்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிவித்து சில முக்கிய சாலைகள், அவற்றின் போக்குவரத்துத் செறிவினைத் தாண்டிவிட்டதால், மேம்பாடு தேவைப்படும் சில முக்கியமான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பரிசீலிக்குமாறு ஒன்றிய அமைச்சரை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்.

மேலும், பொதுமக்கள் இச்சாலையில் பயணம் செய்வதால் காலதாமதமும், விபத்துக்களும் ஏற்படுவதால், இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் முதல் செட்டிபுண்ணியம் வரையிலான 8 வழிச்சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன போக்குவரத்து உள்ளது. சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் இந்த வழித்தடம் இருப்பதால், விழாக்காலம் / விடுமுறைகள் / வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

எனவே, முன்னுரிமை அடிப்படையில், உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.

மேலும், செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள நான்கு வழித்தடமானது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாகவும், விபத்துக்களும் அதிகம் நடைபெறுகிறது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் 6 வழிச்சாலையாக மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதேபோல், கோயம்புத்தூர் புறவழிச்சாலை 26.20 கி.மீ. நீளமுடையது. நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை, கேரளா மாநிலத்திற்குத் கோயம்புத்தூருடன் ஒரு முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. எனவே, இச்சாலையை 4/6 வழித்தட சாலைக்குப் போதிய நிலம் உள்ளதால், கோயம்புத்தூர் புறவழிச்சாலையின் 4/6 வழித்தட சாலையை முன்னுரிமை அடிப்படையில் பணி மேற்கொள்ள அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்.

banner

Related Stories

Related Stories