தமிழ்நாடு

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!

கலந்தாய்வு முடிந்து முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 23 முதல் ஆரம்பிக்க அறிவுறுத்தல்.

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.16 தொடங்கி 26 வரை நடைபெற்றது.

மொத்தம் 2,187 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.30) வெளியாகிறது.

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!

இதைத்தொடர்ந்து, மாணவர்கள் விரும்ப கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்.14 முதல் 19 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23 முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories