முரசொலி தலையங்கம்

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!

‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ தொடங்கி பதிப்பாளராகவும் வலம் வந்தார். 2023 தமிழர் திருநாளாம் பொங்கல் நாள் ‘முரசொலி’யின் கடைசிப் பக்கம் பாசறைப் பகுதியை உருவாக்கி பிரச்சாரகராகவும் சிறந்தார்.

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வாக்­க­ளித்த மக்­கள் மன மகிழ்ச்சி அடை­யும் அள­வுக்கு, வாக்களிக்க மறந்தவர்களும் போற்றிப் பாராட்டும் அளவுக்கு, எதிரிகளும் குறை சொல்லத் தயங்கும் அளவுக்கு, துரோகிகளும் பொறாமையால் வெம்பும் அளவுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு, உலகின் பல்வேறு நிறுவனங்களையும் ஈர்க்கும் அளவுக்கு, ‘திராவிட மாடல்’ ஆட்சியை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இப்பயன்மிகு ஆட்சிக்கு திறன்மிகு துணை முதலமைச்சராக மாண்புமிகு உதயநிதி அவர்களை நியமித்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் - என்கிறார் வள்ளுவர். இந்தச் செயலை, இன்ன காரணத்தால் யார் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து, அந்தச் செயலை அவரிடமே வழங்குமாறு கட்டளையிட்டுச் சொல்கிறது வள்ளுவ அறம். அத்தகைய அறக்கடமையின் பாற்பட்டதாக இருக்கிறது மாண்புமிகு முதலமைச்சரின் தேர்வு!

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!

ஒற்றைச் செங்கல் மூலமாக, ஒன்றிய அரசையே நடு நடுங்க வைத்தவர் மாண்புமிகு உதயநிதி. ஒற்றைச் சொல்லின் மூலமாக சனாதனக் கும்பலையே பதற வைத்தவரும் அவர்தான். தெளிவான கொள்கையும், அதற்கான துணிச்சலும் இருப்பவர்கள் விதைத்ததும் முளைப்பார்கள் என்பதற்கு உதாரணம்தான் உதயநிதி.

வாரிசு குற்றச்சாட்டுகள் எல்லாம் மனப்புண் கொண்டோரின் சினச்சொல்களே தவிர வேறல்ல. தலைவர் கலைஞரால் அடையாளப்பட்ட இன்றைய முதலமைச்சராக இருந்தாலும், இன்றைய முதலமைச்சரால் அடையாளம் காட்டப்பட்ட உதயநிதியாக இருந்தாலும் - பேராசிரியர் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல – ‘திறமையால் தகுதி பெற்றவர்கள். ’இவர்கள் தகுதிக்குரியவர்களாக இருப்பதால்தான் எதிர்க்கப்படுகிறார்கள்.

‘வெறுக்கப்படுபவனே வெற்றி பெறுவான்’ என்று சொன்னவர் தந்தை பெரியார். திராவிட இயக்கம் என்பதே வெறுத்தவர்களால் வளர்ந்ததே. எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம். அதனால்தான் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. இவை அனைத்தும் புதிதல்ல. இதைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்ததில்தான் அமைச்சர் உதயநிதி அவர்களின் வெற்றி அடங்கி இருக்கிறது.

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே ஊராட்சி சபைக் கூட்டங்களில் கிராமப்புறங்களை வலம் வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் கோட்டையில் இருந்து ஒற்றைச் செங்கல்லை உருவினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி விட்டதாகப் பொய் சொல்லி வந்தது பா.ஜ.க. அந்தப் பொய் மாளிகையின் செங்கல்லை உருவியதால் உயர்ந்தார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடி கைதானார்.

பா.ஜ.க.வின் பாசிச அரசியலுக்குப் பலியான அனிதாவின் தியாகத்தை தூக்கிப் பிடித்தார். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினார். தூர் வாரும் பணிகளில் இளைஞரணியினர் ஈடுபடுத்தப்பட்டார்கள். கொரோனா காலத்தில் இளைஞர்களை முழுமையாக உதவிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்று சொல்லி போராடினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்.

சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கழக இளைஞர் அணியில் சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்தார். இவைகளை வெறும் எண்ணிக்கையாகக் கணக்குக் காட்டாமல் எண்ணங்களின் சேர்க்கையாக மாற்றும் வகையில் ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறைக் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!

இப்படி ஒரு கொள்கைவாதியாக இருக்கிறாரே என்பதுதான் எதிரிகளுக்கு அவர் மீதான கோபம். இந்த இயக்கம் வளர்ந்ததே இது போன்ற பயிற்சி பாசறைக் கூட்டங்களின் மூலமாகத்தான். 234 தொகுதியிலும் ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறைக் கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி முடித்திருக்கிறார் உதயநிதி அவர்கள்.

‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ தொடங்கி பதிப்பாளராகவும் வலம் வந்தார். 2023 தமிழர் திருநாளாம் பொங்கல் நாள் ‘முரசொலி’யின் கடைசிப் பக்கம் பாசறைப் பகுதியை உருவாக்கி பிரச்சாரகராகவும் சிறந்தார்.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகிய மூன்று அமைப்புகள் நடத்திய போராட்டம் என்பது தமிழ்நாடு வரலாற்றில் பொறிக்கத்தக்க முக்கியமான போராட்டமாக அமைந்தது. ‘அமைச்சராக இருப்பவர் போராடலாமா?’ என்று கேட்டார்கள். ‘நான் அமைச்சராக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சாதாரண மனிதனாக பங்கேற்றுள்ளேன்’ என்று சொன்ன சொல்லின் மூலமாகவே உயர்ந்தார். பிரதமரைச் சந்தித்தபோதும், அவர் வைத்த ஒரே கோரிக்கை, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்பதுதான்.

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!

சேலம் இளைஞரணி மாநாடு, ‘இனி இந்த இயக்கத்துக்கு 100 ஆண்டுகளுக்கான போர் வீரர்கள் தயாராகி விட்டார்கள்’ என்பதை உலகுக்கு அறிவித்தது. ஆறு லட்சம் இளைஞர்கள் கூடிய எழுச்சி மாநாடு இது. புல்லட் பயணங்கள், புதிய உற்சாகத்தை விதைத்தது. ட்ரோன் கேமராக்களின் நடனம், நவீன வரவுகளாக அமைந்திருந்தது. இதனை நடத்திக் காட்டிய இளைய தலைமையாக உயர்ந்தார் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.

‘என் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார் மாண்புமிகு உதயநிதி அவர்கள். திராவிட இயக்கத்துக்கான பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் பாசறைக் களமாக அமைந்துள்ளன அந்தப் போட்டிகள்.

விளையாட்டுத் துறையில் உலக மைதானமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இளைஞர்களின் மேம்பாடும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பள்ளிக் குழந்தைகளோடு காலையில் அமர்ந்து உண்ணும் உணவு, அந்த பிள்ளைச் செல்வங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. முதலமைச்சர் உருவாக்கிய சிறப்புத் திட்டங்களை மிகச் சிறந்த திட்டங்களாக தனது கண்காணிப்பில் வளர்த்து வருகிறார் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள்.

“இனிய உதயமே வருக!” - தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்து!

கட்சி, ஆட்சி ஆகிய இரண்டுக்கும் தூணாக விளங்குபவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது காலத்தின் கடமையே! அக்கடமையை திறம்படச் செயல்படுத்துவது அவரது திறமையே! இத்திறமை மூலமாக தமிழ்நாடு அடைவது பெருமையே!

மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களை, தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ நெஞ்சார வாழ்த்துகிறது!

banner

Related Stories

Related Stories