தமிழ்நாடு

உயர்கல்வி சேர்க்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்! : அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!

“புதுமைபெண் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களால் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 34 சதவிதம் உயர்ந்துள்ளது” என்றார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்.

உயர்கல்வி சேர்க்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்! : அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெரும் மகளிர் பள்ளியான புனித தெரெசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 634 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியை லீமாரோஸ் வரவேற்புரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமைதாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

சிறப்புரையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது, “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்கள் அதிகமாக படிப்பார்கள். எனவே, அம்மாணவர்கள் படிப்பில் தனிகவனம் செலுத்தி உயர்த்திவிடவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்துவருகிறது.

உயர்கல்வி சேர்க்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்! : அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!

இதன் மூலமாக 2022 ஆம் ஆண்டு மட்டும் இந்திய அளவில் முதன்மையான உயர்கல்வி நிலையங்களில் மேல்படிப்புக்கு 75 பேர் சேர்ந்தனர். 2023ஆம் ஆண்டு, சேர்க்கை எண்ணிக்கை 274ஆக உயர்ந்தது. தற்போது இந்த ஆண்டு 447 மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

ஒன்றிய சிவில் சர்விஸ் முதன்மை தேர்வு எழுத 1000 மாணவர்களுக்கு மாதம்தோரும் ரூ.7.500 வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்ச்சி பெரும் இளைஞர்களுக்கு ரூ. 25 ஆயிரம் ஊக்கத்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் IIT, NIT ஆகிய தேசிய பல்கலைகழகங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறை என அனைத்து துறைகளிலும் முதன்மையான துறைகளில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்து செயல்படுத்திவருகிறார் முதலமைச்சர்.

இப்படிபட்ட சலுகைகளின் காரணமாக உயர்கல்வி மாணவர்களின் சேர்க்கையில் இந்தியாவின் சராசரியான 27.10 விழுக்காட்டை விட ஏறக்குறைய இரட்டிப்பு மடங்கு அதிகமாக, தமிழ்நாடு 51.40 விழுக்காடுடன் முதலிடத்தில் உள்ளது. புதுமைபெண் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களால் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 34 சதவிதம் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories