தமிழ்நாடு

புதுச்சேரியில் ஒட்டகம் உயிரிழந்த விவகாரம் : தனியார் நிறுவனம் மீது வழக்கு - நடந்தது என்ன?

புதுச்சேரியில் ஒட்டகம் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் ஒட்டகம் உயிரிழந்த விவகாரம் : தனியார் நிறுவனம் மீது வழக்கு - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள பாண்டி மெரினா கடற்கரையில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டகம், குதிரை சவாரிகளும் உள்ளன. அங்கு வரும் மக்கள் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் ஒட்டகம் உயிரிழந்த விவகாரம் : தனியார் நிறுவனம் மீது வழக்கு - நடந்தது என்ன?

இந்த சூழலில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட ஒட்டகம், கடந்த ஜூலை மாதம் 25-ம் உயிரிழந்தது. இதையடுத்து அந்த தனியார் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டகம் இறந்தது குறித்து காவல்துறை, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இதனையடுத்து ஒட்டகம் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, வழக்கறிஞர் ஜெபின் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புதுச்சேரியில் ஒட்டகம் உயிரிழந்த விவகாரம் : தனியார் நிறுவனம் மீது வழக்கு - நடந்தது என்ன?

ஜெபின் அளித்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் பிரத்திவி, ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் புதைக்கப்பட்ட ஒட்டகம் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஒட்டகத்தின் உடல் புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது உயிரிழந்த ஒட்டகத்தை சரியாக பராமரிக்காததன் காரணமாக தனியார் நிறுவனத்தின் மீது விலங்கின் நோயை சரியாக கண்டறியாமல் இருப்பது, ஊனமாக்குதல், சரியாக பராமரிக்ககாமல் விடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (325 BNS) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories