தமிழ்நாடு

”புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க பார்க்கும் ஒன்றிய அரசு” : தயாநிதி மாறன் MP பேச்சு!

புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு திணிக்க பார்க்கிறது என தயாநிதி மாறன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

”புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க பார்க்கும் ஒன்றிய அரசு” : தயாநிதி மாறன் MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளதால்தான் ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வழங்க மாறுகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு புகுத்த முயற்சிக்கிறது என தயாநிதி மாறன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்பேசிய தயாநிதி மாறன் எம்.பி, " செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முடியாது என்று சொன்னார்கள். ஆனால் நமது அரசு அதை சிறப்பாக நடத்தி காட்டியது. அதேபோல்தான் பார்முலா 4 கார் பந்தயத்தையும் நடத்த முடியாது என்றார்கள் ஆனால் இப்போது உலகத்தின் பார்வையை சென்னை பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ், ஆங்கிலம் மொழி மட்டுமே படித்து உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் பதவிகளில் நம் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் மூன்றாம் மொழியான இந்தியை படித்து இருந்தால் நாம் வேலை இல்லாமல் தான் இருந்து இருப்போம்.

அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதனால்தான் ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பது திராவிட அரசு வந்த பிறகு தான் கிடைத்தது.

இந்தியாவின் மிக பெரிய சொத்தாக உள்ளது மனித வளம் தான். அதில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு இருக்கிறது. இதை சிதைக்கவே புதிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு திணிக்க பார்க்கிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் ஒரு பகுதியாகத்தான் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் நடத்தியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories