”பா.ஜ.க மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து இருந்தால் நீட் நுழைவு தேர்வைபோல் இன்னும் பல நுழைவு தேர்வுகளை கொண்டு வந்து ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவை சிதைத்து இருப்பார்கள்.இதை தடுத்தது இந்தியா கூட்டணிதான்" என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. நாம் கொண்டுவந்த இலவச பேருந்து பயண திட்டத்தைப் பார்த்துதான் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது.
அதேபோன்றுதான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து இருந்தால் நீட் நுழைவு தேர்வைபோல் இன்னும் பல நுழைவு தேர்வுகளை கொண்டு வந்து ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவை சிதைத்து இருப்பார்கள். இதை தடுத்தது இந்தியா கூட்டணிதான்.
முதன் முதலில் நீட் தேர்வை எதிர்த்தது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இப்போது மற்ற மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்" என தெரிவித்துள்ளார்.