தமிழ்நாடு

நாட்டுடமை ஆக்கப்பட்ட கலைஞரின் படைப்புகள் : "புகழால் தமிழ் காப்பார் கலைஞர்"- முரசொலி புகழாரம் !

நாட்டுடமை ஆக்கப்பட்ட கலைஞரின் படைப்புகள் : "புகழால் தமிழ் காப்பார் கலைஞர்"- முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (24.8.2024)

அவரே மொழி! அவரே விழி!

அவரே மொழிக்கு உடமை ஆனவர்!

அவரே இனத்துக்கு உடமை ஆனவர்!

அவரே நாட்டுக்கு உடமை ஆனவர்!

அவர்தம் எழுத்துக்களை நாட்டுக்கே உரிமையாக்கி இருக்கிறார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே அவர்தம் கொள்கையாம். கலைஞர்தம் எழுத்துக்களையும் எல்லார்க்கும் ஆனதாக ஆக்கி இருக்கிறார்.

தலைவர் கலைஞருக்கு தனி வாழ்க்கை, பொது வாழ்க்கை எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி பிணைந்த வாழ்க்கையே அமைந்தது. அப்படியே அமைத்துக் கொண்டார். வாழ்நாள் முழுக்கவே பொதுமை வாழ்க்கைதான் கலைஞருடையது!

“மூக்கினிலே மூச்சுப் போகும் வரையினிலே

முத்தமிழுக்குத் தொண்டு செய்வீர்!

போனபின்னும் புகழாலே தமிழ் காப்பீர்!”

– -என்றவர் கலைஞர். எழுதியபடி நின்றவர் கலைஞர். இதோ அவரது எழுத்துக்களை -– நூல்களை நாட்டுடமை ஆக்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

‘உரிமைத் தொகை ஏதுமின்றி’ என்ற அறிவிப்பு பொதுமைப் பண்பின் அடையாளமாகவே அமைந்திருக்கிறது. ‘போனபின்னும் புகழாலே தமிழ் காப்பீர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக அமைந்துவிட்டது, மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு.

“செங்கோல் பறிக்கப்படினும் சிறிதும் கவலையில்லை –- என் கை எழுதுகோலை எவரும் பறிக்க முடியாது” -– என்று எழுதுகோல் தாங்கியே இருந்தார் கலைஞர். எத்தனை வயதில் எழுதத் தொடங்கினார் என்பது கண்டுபிடிக்கப்படாத செய்தி. ஆனால் இறுதி வரை எழுதினார். எழுத முடியாத இறுதி நிலையிலும் ‘தமிழ்’ என்று எழுதினார். ‘அண்ணா’ என்று எழுதினார்.

நாட்டுடமை ஆக்கப்பட்ட கலைஞரின் படைப்புகள் : "புகழால் தமிழ் காப்பார் கலைஞர்"- முரசொலி புகழாரம் !

ஜெயலலிதா ஆட்சியில் கொடூரமான முறையில் கலைஞர் கைது செய்யப்பட்டார். கையை முறுக்கி இழுத்துச் சென்றது ஜெ.போலீஸ். சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சட்டையைக் கழற்றி ஊடகங்களின் முன்னால் காட்டினார் கலைஞர். ‘ரத்தக் கட்டு அதிகம் ஆகிவிட்டது. வலிக்கிறது. என்னால் எழுத முடியவில்லை’ என்று சொன்னவர் கலைஞர்.

‘பேனாவை என்னிடம் இருந்து பறித்தால் செத்துடுவேன்யா’ என்று சொன்னவர் கலைஞர். அந்த வகையில் அவருக்கு ஆறாவது விரலாக –- மூன்றாவது கையாக -– இருந்தது பேனா!

“ஏதுமறி யாத்தமிழர் தூய வாழ்வை எனக்குப் பின் சீர்படுத்தும் மறவன் நீதான்!” –- என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால் போற்றப்பட்டவர் கலைஞர். அவர் மறைந்தபோது தீட்டிய கவிதாஞ்சலி, இன்று கேட்டாலும் கண்ணீரருவியை உருவாக்கும். தந்தை பெரியாரையே உருக வைத்த கவிதை அது.

“அண்ணாவின் மறைவுக்குப்பின் ரேடியோவில் அண்ணாவைப் பற்றி அவர் பாடிய கவிதையைக் கேட்ட பொழுதுதான் அவர் எவ்வளவு பெரிய புலவராக வளர்ந்திருக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உடனே டெலிபோனில் கூப்பிட்டு, ‘ஐயா, நீங்கள் இவ்வளவு பெரிய புலவர் என்பதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்’ என்று பாராட்டினேன். இவ்வளவு நெருங்கிப் பழகிய என்னாலேயே அவருடைய திறமைகளை எல்லாம் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அப்படி எந்தத் துறையிலும் பிரகாசமாக விளங்குகிறார் கலைஞர் கருணாநிதி” –- என்று சொன்னவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

அந்தக் காலத்தில் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் நாரண துரைக்கண்ணன். அவர் சொன்னார்:

“ கலைஞர் இன்றுள்ள உன்னத நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், சதா படிப்பு, பேச்சு, எழுத்து, உழைப்பு, ஊக்கம் தான் காரணம். உணவு, உறக்க நேரந் தவிர கலைஞர் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார். எழுதிக் கொண்டே இருப்பார். சிந்தனை செய்து கொண்டே இருப்பார். பாவேந்தர் பாடல்கள் முழுவதும் கலைஞருக்கு மனப்பாடம். நாடக, சினிமா வசன வளத்துக்குக் காரணம், அவருக்கு இளமைதொட்டு சேர்த்து வைத்த சொல்லாட்சியும், பொருட்செறிவும் கற்பனை வளமும்தான் காரணம்.

முதலமைச்சர் ஆனதும் கலை- – இலக்கியத்தைக் கைவிட்டு விடுவாரோ என்று நான் கருதியதுண்டு. ஆனால் அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதையும், படைப்பிலக்கியம் ஆக்குவதையும் விடவே இல்லை. முன்னைவிட மிகுதியாக எழுதுகிறார். நூல்களை ஆக்குகிறார். ‘எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள், இலக்கியத்தை மறந்துவிடாதீர்கள்’ என்று நான் சொல்வேன். ‘எந்த நிலையிலும் நான் எழுதுவதை விடமாட்டேன். உறுதியாக நம்புங்கள்’ என்று சொல்வார். அப்படிச் சொன்னபடியே, இல்லத்தில் இருக்கும்போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் மட்டுமல்லாமல் வெளியே கார், ரயில் பயணங்களின் போதும் எழுதிக் கொண்டேயிருப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன்” என்று சொன்னாரென்றால், அவர்தாம் கலைஞர். அருந்தமிழ்ச் செல்வர்.

நாட்டுடமை ஆக்கப்பட்ட கலைஞரின் படைப்புகள் : "புகழால் தமிழ் காப்பார் கலைஞர்"- முரசொலி புகழாரம் !

அரசியலில் இருந்த இலக்கிய ஆர்வலர் அல்ல கலைஞர். அரசியலில் செய்த அதே ஆட்சியை இலக்கிய உலகத்திலும் செய்தவர் கலைஞர். அவரை வாசித்து அவரைப் போல எழுதக் கிளம்பியவர்கள், பேசக் கிளம்பியவர்கள் அதிகம். அவரைப் போல நடு உச்சி எடுத்துக் கொண்டோரும், கரகர குரலை வரவைத்துக் கொண்டோரும் அதிகம்.

திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொன்னார்: “கலைஞரின் ‘ரோமாபுரிப் பாண்டியன்’ நூலைப் படித்தபோது அவர் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்படியாக இருக்கின்றது.” என்றார்.

மூப்பில்லாத் தமிழ் தந்த மு.வ. சொன்னார்: “தமிழகத்தின் பெருமையைச் சங்க காலம் போல மீண்டும் உலகம் போற்றக் கூடிய அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற கனவை நனவாக்க விடாமுயற்சியை மேற்கொண்டுள்ள சிறந்த அறிஞர் கலைஞர். தமிழ் அரசர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிக்குப் பின் புலவராகவும், அரசராகவும் வாழ்பவர் கலைஞர் ஒருவர்தான். தமிழறிஞர்களை, புலவர்களை வாழ்விக்கும் புரவலராக இருந்து பாதுகாத்து வருபவர் கலைஞர்” என்றார்.

பாவாணரும், மு.வ.வும் தமிழ் ஆய்வுலகப் பரப்பில் விரிந்து பரந்த அறிவுத்திறனுக்கு உரிமை உடையவர்கள். அவர்களே வியந்தார்கள் கலைஞரின் தமிழைப் பார்த்து, இலக்கியத்தைப் பார்த்து, எழுத்தைப் பார்த்து!

ஆனால் இவை அனைத்தையும் ‘அவையடக்கத்துடன்’ தான் எழுதினார் கலைஞர்!

“என் கவிதை யாப்பின்றிப் போனாலும் போகட்டும் –- நம் நாடு மொழி மானம் உணர்வெல்லாம் காப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்கை கொண்டோன்!” -– என்று சொல்லிக் கொண்டாலும் கவிதை வளமும் கற்பனைத் திறனும் சொல்லாளுமையும், எழுத்து வன்மையும் கொண்டு எழுதித் தள்ளினார் கலைஞர். வாசித்தது தமிழ்நாடு. வாசித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. தன்னையே உடமையாக்கிக் கொண்டவரின் தமிழ், இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது. புகழால் தமிழ் காப்பார் கலைஞர்!

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "டி20 உலகக் கோப்பை இறுதி போட்டி முடிவை பற்றி நாம் எப்போது நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அப்போது அதைப்பற்றி பேசுகிறார்கள். என்னால் முடிந்தவரை அதை மறப்பதற்கு நினைக்கிறேன். ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை. ஒரு நாள் இரவு, யாரோ ஒருவர் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் எங்களுக்காக வருத்தம் அடைந்தால், அதை எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இருந்தது. சில விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே விரும்புவோம்." என்றார் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

banner

Related Stories

Related Stories