தமிழ்நாடு

“பெருமையின் அடையாளங்களாக இருக்கும் அரசுப்பள்ளிகள்” : அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகழாரம்!

“பழைய காலத்தில் பேசுவார்கள் கோயில் இல்லா இடத்தில் குடியிருக்கவேண்டாம் என்று பேசுவார்கள், இப்போது பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அளவில் இப்போது சமூகம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது”

“பெருமையின் அடையாளங்களாக இருக்கும் அரசுப்பள்ளிகள்” : அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் இயங்கிவந்த அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி கட்டிடமானது கிழக்கு கடற்கரை சாலையை அகலபடுத்தும் பணியின் காரணமாக இடம் மாற்றப்பட்டு பாலவாக்கம், பல்கலைநகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு, பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றிய போது பேசியது,

பழைய காலத்தில் பேசுவார்கள் கோயில் இல்லா இடத்தில் குடியிருக்கவேண்டாம் என்று பேசுவார்கள், இப்போது பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அளவில் இப்போது சமூகம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

கோயிலும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் பள்ளிகளும் இருக்கவேண்டும், பள்ளிகள் தான் மக்களின் அறிவுகண்களை திறக்கும், ஒரு சமூதாயத்தின் விடியலை ஏற்படுத்தும், சமூகத்தின் மாற்றத்திற்கு விடியலாக இருக்கும்.

“பெருமையின் அடையாளங்களாக இருக்கும் அரசுப்பள்ளிகள்” : அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகழாரம்!

பள்ளியில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொல்லும் அளவில் தொடக்க பள்ளிகளாக இருந்தாலும், நடுநிலைப் பள்ளிகளாக இருந்தாலும், உயர்நிலைப் பள்ளிகளாக இருந்தாலும், மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இன்று எல்லா இடங்களிலும் விரிந்து பரந்து உள்ளது.

அரசு பள்ளிகள், பெருமையின் அடையாளங்களாக இருக்கும் பள்ளிகளாக விளங்குகின்றன. அரசு பள்ளிகளில் படித்தால் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏராளமான சலுகைகளை பெறமுடியும், புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெறமுடியும், தமிழ்புதல்வன் திட்டத்தில் மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறமுடியும், இன்னும் ஏராளமான சலுகைகளை அரசு பள்ளிகளில் படித்தால் பெறமுடியும்.

இதனால் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்ற நிலையில் முதலமைச்சர் ஏற்படுத்திய காரணத்தால் தான் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை 34 சதவிதம் உயர்ந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

    banner

    Related Stories

    Related Stories