தமிழ்நாடு

”42% பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” : அமைச்சர் சி.வெ. கணேசன் பெருமிதம்!

இந்தியாவிலேயே 42% பெண்கள் வேலை செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

”42% பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” : அமைச்சர் சி.வெ. கணேசன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அகில இந்திய கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கலந்தாலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய மைச்சர் சி.வெ கணேசன, ”இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 44.74,682 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள். 27 திட்டங்களை புதிதாக முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். 23,70,288 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 17,29,750 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.

தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை எதுவும் நிற்காது. அவர்களுக்கு சென்று சேரும். புதிதாக பதிவு செய்த . 13.76 லட்சம் தொழிலாளர்களுக்கு பணம் உதவி கொடுத்துள்ளோம்.‌

இந்தியாவிலேயே 42% பெண்கள் வேலை செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நமது முதலமைச்சர் கொண்டு வந்த பல நல்ல திட்டத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. 1000 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கி தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. மேலும் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories