தமிழ்நாடு

ரூ.36,238 கோடி - தூத்துக்குடியில் சிங்கப்பூர் ஆலை : நாளை அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடியில் சிங்கப்பூர் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.36,238 கோடி - தூத்துக்குடியில் சிங்கப்பூர் ஆலை : நாளை அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்ட செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம் 1,511 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செம்கார்ப் நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தானது. மேலும் ரூ.36,238 கோடி மதிப்பீட்டில் இந்நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

செம்கார்ப் கிரீன் ஹைட்ரஜன் இந்தியாவின் பதாகையின் கீழ் இந்தியாவில் அமைக்கப்படும் பச்சை அம்மோனியா ஆலைக்கானது. கூடுதலாக, Sembcorp இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய ஜப்பானிய நிறுவனங்களான Sojitz Corp மற்றும் Kyushu Electric Power நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளன.

banner

Related Stories

Related Stories