தமிழ்நாடு

”திராவிட மாடல் அரசின் குடிசைகள் இல்லா தமிழ்நாடு” : அமைச்சர் பொன்முடி பேச்சு!

குடிசைகள் இல்லாத தமிழ்நாடாக மாற்ற வேண்டும் என்பதே நமத முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் அரசின் குடிசைகள் இல்லா தமிழ்நாடு” : அமைச்சர் பொன்முடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கோலியனூர், கண்டமங்கலம், திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, மூலம் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடாக மாற்ற வேண்டும் என்பதற்காக கலைஞர் கொண்டுவந்த திட்டம் இது.

அ.தி.மு.க ஆட்சியில் இந்த திட்டத்தை கைவிட்டனர். தற்போது மீண்டும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு புத்துயிர் அளித்து குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் கலைஞர் அவர்கள். தற்போது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலைஞர் வழியில் கல்விக்கான பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் கல்வி விளக்காக இருந்து வருகிறார் " என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories