தமிழ்நாடு

மெட்ரோ பயணிகளுக்கு இன்ப செய்தி.. பல்வேறு வசதிகளுடன் அறிமுகமானது Ongo Ride Card - முழு விவரம் !

மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகளின் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மெட்ரோ இரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்ரோ பயணிகளுக்கு இன்ப செய்தி.. பல்வேறு வசதிகளுடன் அறிமுகமானது Ongo Ride Card - முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், AGS Transact Technologies நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டண தளமான Ongo உடன் இணைந்து, 13 தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து அட்டைகளை (Ongo Ride Card) வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியானது மெட்ரோ பயணிகளுக்கு இடையூறு இல்லாத மற்றும் விரைவாக பயணச்சீட்டு வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடனடி போக்குவரத்து அட்டைகளை பயணிகள் நந்தனம், கோயம்பேடு, கிண்டி, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், எழும்பூர், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம், திருமங்கலம், உயர்நீதிமன்றம், காலடிப்பேட்டை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, வடபழனி மற்றும் விமான நிலையம் ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள விற்பனை இயந்திரங்கள் மூலம் KYC சரிபார்ப்பு இல்லாமல் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

மெட்ரோ பயணிகளுக்கு இன்ப செய்தி.. பல்வேறு வசதிகளுடன் அறிமுகமானது Ongo Ride Card - முழு விவரம் !

மெட்ரோ இரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களில் பயணிகள் UPI மூலம் பணம் செலுத்தி, எளிதாக உடனடி போக்குவரத்து அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு உடனடி போக்குவரத்து அட்டையிலும் ரூ.50 முன்பணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களது மொபைலில் Ongo செயலி மூலம் அல்லது சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் பயணச்சீட்டு விற்பனை செய்யும் இடங்களில் உடனடி போக்குவரத்து அட்டைகளை எளிதாக ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

மெட்ரோ பயணிகளுக்கு இன்ப செய்தி.. பல்வேறு வசதிகளுடன் அறிமுகமானது Ongo Ride Card - முழு விவரம் !

சிங்கார சென்னை அட்டைகள் நடைமுறையில் உள்ள நிலையில் Ongo Ride அட்டைகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பயணிகள் உடனடி போக்குவரத்து அட்டைகளை (Ongo Ride Card) மெட்ரோ, மெட்ரோ வாகன நிறுத்தம் போன்ற வசதிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆகஸ்ட் 12, 2024 நிலவரப்படி, மொத்தம் 3.36 லட்சம் சிங்கார சென்னை அட்டைகள் (NCMC Card) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இன்று (14.08.2024) நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில், உடனடி போக்குவரத்து அட்டை விற்பனை செய்யும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தி.அர்ச்சுனன் (திட்டங்கள்), AGS Transact Technologies நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விநாயக் கோயல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் Ongo நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories