கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பள்ளிகளுக்கு இடையேயான ’தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் துவக்க விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தமிழோடு விளையாடு சீசன் 2 நிகழ்வை துவக்கிவைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கலைஞர் தொலைக்காட்சி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழோடு விளையாடு நிகழ்ச்சி முதல் சீசனில் 32 வாரம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. மொழியை வைத்து பெயர் வைக்க கூடிய ஒரே மொழி தமிழ்தான்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி,”திராவிட மாடல் அரசின் 3 ஆண்டு காலம் பள்ளி கல்வித்துறையின் பொற்காலம்.இல்லத்திற்கே கல்வியை கொண்டு சென்று கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க அரசு.
தமிழ்மொழியை மேலும் வளர்க்க கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்.