தமிழ்நாடு

செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள புதிய WhatsApp சேனல் : அசத்தும் தமிழ்நாடு அரசு!

செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள புதிய WhatsApp சேனலை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள புதிய WhatsApp சேனல் : அசத்தும் தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூக ஊடகங்கள் அதிகரித்த பிறகு உண்மை செய்திகளை காட்டிலும் போலி செய்திகள் அதிகம் வைரலாகி வருகிறது. இதனால் இணையங்களில் வைரலாகும் செய்திகளில் எது உண்மை? எது பொய் என்பதை அறிந்து கொள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அண்மையில் கூட உலகமே போற்றும் தமிழ்நாடு அரசின், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான தகவலை வெளியிட்டார்.

இதற்கு தமிழ்நாடு அரசின் TN Fact Check ஆதாரங்களுடன் அண்ணாமலையின் பொய்களை தோலுரித்து காட்டியது. இப்படி TN Fact Check செய்திகளின் உண்மைத் தன்மைகளை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வருகிறது.

இந்நிலையில், செய்திகளின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் புதிய WhatsApp சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான OR Code-ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்து உடன் புதிய WhatsApp சேனல் தங்களது WhatsAppல் இணைந்துவிடும். இந்த சேனலில் போலியாக பரப்பப்படும் செய்திகளின் உண்மை என்ன என்பது இடம் பெறும். இதைபார்த்து மக்கள் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளமுடியும்.

banner

Related Stories

Related Stories