தமிழ்நாடு

இலங்கை கடற்படை தாக்குதல் : ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு!

தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வியலில் தொடர் இடையூரு தரும் இலங்கை கடற்படை, இன்று உயிர்சேதம் அளவிற்கு சென்றது சர்ச்சையாகியுள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதல் : ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி தொழிலையே, உயிருக்கு உத்தரவாதமற்ற தொழிலாக மாற்றியுள்ளது இலங்கை கடற்படை.

இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க சென்றாலே, எல்லைத்தாண்டியதாக காரணம் காட்டி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம், தற்போது ஒரு படி மேல் சென்று தாக்குதலாக மாறியுள்ளது.

அவ்வகையில், நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதில் மீனவர்கள் சென்ற மீன்பிடி படகுகள் கடலில் மூழ்கி, 4 பேர் மாயமாகினர். ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டித்து, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை அருகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories