தமிழ்நாடு

உயிரை கொடுத்து 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் - ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!

உயிரை கொடுத்து 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் - ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் வழக்கம்போல் நேற்றைய முன்தினம் (ஜூலை 24) மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேனில் சென்றார்.

அப்போது வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது சேமலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சுதாரித்த அவர், வேனில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகிவிட கூடாது என்று எண்ணி, தன் உயிரை கையில் பிடித்தபடியே வேனை ஓட்டிச்சென்று சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, ஸ்டிரியங்கில் தனது தலையை வைத்தபடியே உயிரிழந்தார். ஓட்டுநர் சேமலையப்பனின் இந்த துரித செயலால் 20 குழந்தைகள் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.

உயிரை கொடுத்து 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் - ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!

தொடர்ந்து ஓட்டுநர் சேமலையப்பனின் செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதியான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சேமலையப்பன் குடும்பத்தினரிடம் வழங்கினார். உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பனுக்கு லலிதா என்ற மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை கொடுத்து 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் - ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!

அதோடு சேமலையப்பன் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்தும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கேயத்தில் அமைந்துள்ள சேமலையப்பன் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தோம். தன்னுடல் இழந்தாலும் மனிதநேயமிக்க மனிதர்களின் மனங்களில் உயிர் பெற்றுள்ளார் சேமலையப்பன் அவர்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories