தமிழ்நாடு

நிபா வைரஸ் எதிரொலி - ”கேரளாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்” : கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!

நிபா வைரஸ் அதிகரித்துள்ளதால் கேரளாவிற்கு சுற்றுலா செல்தை தவிற்க வேண்டும் என கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை எடுத்துள்ளது.

நிபா வைரஸ் எதிரொலி - ”கேரளாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்” : கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுவன் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 350 பேரின் தொடர்புகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழநாட்டிற்கு வரும் பயணிகளின் உடல் வெப்ப பிரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ”கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் கல்லூரியின் மாணவர்கள் கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு” கல்லூரி நிறுவனங்களுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories