தமிழ்நாடு

"முதலமைச்சரின் திட்டங்களால் தமிழாண்டு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக உள்ளது" - அமைச்சர் உதயநிதி !

"முதலமைச்சரின் திட்டங்களால் தமிழாண்டு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக உள்ளது" - அமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மாதவரம் சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2124 திட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை காண பட்டங்கள் வழங்குகின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மிகுந்த பெருமை , மகிழ்ச்சி அடைகின்றேன். நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சாதனைகளை முதலமைச்சருடைய உழைப்பை அங்கீகரிக்கின்ற வகையில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 என்று 100% வெற்றியை மிகப்பெரிய வெற்றி தமிழ்நாட்டு மக்கள் நீங்கள் நம்முடைய இயக்கத்திற்கு நம்முடைய அரசிற்கு அங்கீகாரமாக கொடுத்தீர்கள். அதற்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது திராவிட மாடல் அரசு இந்த வேலையில் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் நடுத்தர வர்க்க மக்களுடைய ஏற்றத்திற்காக தினம் தினம் பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட மாடல் அரசும் எப்போதும் உங்களுடன் நிற்கிறது. அதேபோல நீங்களும் எப்பொழுதும் கழகத்திற்கும் நம்முடைய தலைவருக்கும் நம்முடைய அரசுக்கும் பக்கபலமாக தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறீர்கள். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமை. கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்தே உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என அடிப்படை தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றப்பட்டு வருகிறோம். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1970 ல் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார்கள். மதுரை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என நம் தலைவர் அவர்கள் மேம்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாது எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு அறிவித்துள்ளார்.

"முதலமைச்சரின் திட்டங்களால் தமிழாண்டு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக உள்ளது" - அமைச்சர் உதயநிதி !

அதுமட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கட்டிட அனுமதி ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்குகின்ற திட்டத்தையும் நேற்று தொடங்கி வைத்துள்ளார். வீடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த வீட்டுக்கான பட்டாவும் முக்கியம். குறிப்பாக சென்னையில தேர்தல் பிரச்சாரத்தில் நாம் முதலமைச்சருடைய அறிவுரைப்படி உங்களுக்கெல்லாம் ஒரு வாக்குறுதி அளித்து இருந்தேன். சென்னையில் பட்டா பிரச்சனை பல வருஷமாக இருக்க அப்படி பட்டா கிடைக்காமல் இருக்க உங்களுக்கு நிச்சயம் தேர்தல் முடிந்தவுடன் நம்முடைய ஆட்சியில் பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நான் அளித்திருந்தேன். தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு மாதம் தான் ஆகியுள்ளது, இந்த இரண்டு மாதத்துக்குள்ள முதலமைச்சர்கள் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.

நம்முடைய திராவிட அரசு பல வருஷமா பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு கூட இன்னைக்கு பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சிஎம்டிஏ ஒருமுறை வரன்முறை செய்யப்பட்ட திட்டத்திற்கு கீழ் வழங்கப்படும் பட்டாக்களுக்கு கணினி பட்டா கொடுக்கிறது. நத்தம் செட்டில்மெண்ட் டவுன் செட்டில்மெண்ட் 2018க்கு அப்புறம் சென்னை வருவாய் மாவட்டத்தோடு இணைந்த பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா கொடுக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசின் முயற்சியால் இன்றைக்கு உங்கள் ஒவ்வொருத்தருடைய கையிலும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று இருக்கின்ற மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்து சிந்திக்கும் அரசு என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி. இவ்வளவு நாள் சொந்த வீடா இருந்தாலும் பட்டா இல்லையே என்று ஒரு தயக்கமும் கலக்கமும் இருந்திருக்கும். இனி அந்த பிரச்சனை உங்களுக்கு எதுவும் கிடையாது.

"முதலமைச்சரின் திட்டங்களால் தமிழாண்டு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக உள்ளது" - அமைச்சர் உதயநிதி !

உங்க வீட்டில் நீங்க நிம்மதியா மகிழ்ச்சியாக தூங்கலாம் எனில் இருந்து உங்கள் வீட்டு மனை வீடு சட்டபூர்வமாக உங்களுக்கு சொந்தமாக இருக்கும். நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு இது மட்டுமல்லாமல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம் மூலமாக கிட்டத்தட்ட 500 கோடி பயணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பல மாநிலங்கள் மட்டுமல்ல கனடா இலங்கை போன்ற வெளிநாடுகளும் நம்முடைய இந்த திட்டத்தை பின்பற்றி வருகிறது. 20 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே முதலமைச்சர் அவர்களால் இரண்டு வாரத்துக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கின்ற மூன்று லட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது இது எல்லாத்தையும் விடவும் மிக மிக முக்கியமான திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்க்கு கடந்த 11 மாதங்களாக மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமை தொகை திட்டம் வழங்கி வருகிறோம்.

இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி நம்முடைய அரசு தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை நம்முடைய முதலமைச்சராக அவர்கள் செயல்படுத்தி இருக்கிற காரணத்தினால் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு மகளிர் முன்னேற்றம் தரமான கல்வி சுகாதாரமுள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. இதை நான் கூறவில்லை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு விவரத்தோடு தெரிவித்துள்ளது. நீங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்காக இந்த திராவிடம் மாடல் அரசு உங்களுக்கும் உங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்காகவும் உழைக்க தயாராக இருக்கிறோம் எங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories