தமிழ்நாடு

ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு : நயினார் நாகேந்திரனிடம் 7 மணிநேரங்களுக்கு மேல் நடந்த விசாரணை!

சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் காலை முதல் மாலை வரை தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு : நயினார் நாகேந்திரனிடம் 7 மணிநேரங்களுக்கு மேல் நடந்த விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சார நேரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த வேளையில், நெல்லையிலிருந்து தாம்பரம் தொடர்வண்டி நிலையம் கொண்டுவரப்பட்ட ரூ. 4 கோடியை, தாம்பரம் காவல்துறை பறிமுதல் செய்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் தொடர்பிருந்தது தெரியவந்தது.

ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு : நயினார் நாகேந்திரனிடம் 7 மணிநேரங்களுக்கு மேல் நடந்த விசாரணை!

இந்நிலையில், ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நேற்றைய நாள் (15.7.24) தமிழ்நாடு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

அதனையடுத்து, இன்று (16.7.24) சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் காலை முதல் மாலை வரை தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இவ்விசாரணை சுமார் 7 மணிநேரங்கள் நடத்தப்பட்ட பின், நயினார் நாகேந்திரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து வெளிவந்தார்.

banner

Related Stories

Related Stories