தமிழ்நாடு

1.24 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி... விக்கரவாண்டி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா !

1.24 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி... விக்கரவாண்டி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 6 ஆம் தேதி காலமானதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது. பின்னர் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கிய நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் தொடர் தோல்வி பயத்தால் இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

1.24 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி... விக்கரவாண்டி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா !

திமுக அரசின் மகத்தான சாதனைகளை கூறி திமுக கூட்டணி தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்.

1.24 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி... விக்கரவாண்டி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா !

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி 56,589 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார். சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளும் குவிந்தது.

இந்த சூழலில் இன்று எம்.எல்.ஏ-வாக அன்னியூர் சிவா பதவிஏற்றுக்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் இந்த பதவி பிரமாணம் நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான செல்வப்பெருந்தகை, விசிக தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories