தமிழ்நாடு

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : 190 கேள்விகள்... பாஜக நிர்வாகி SR சேகரிடம் 7 மணி நேரம் CBCID விசாரணை !

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : 190 கேள்விகள்... பாஜக நிர்வாகி SR சேகரிடம் 7 மணி நேரம் CBCID விசாரணை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசார சமயத்தில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் இரயில் நிலையத்தில் பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கில் அடுத்தடுத்து என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோரும் சிக்கினர்.

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : 190 கேள்விகள்... பாஜக நிர்வாகி SR சேகரிடம் 7 மணி நேரம் CBCID விசாரணை !

தொடர்ந்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் பலரது வீடுகளிலும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

இந்த சூழலில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று (ஜூலை 11) சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று, ஐகோர்ட் உத்தரவின்படி அவர் விசாரணைக்கு ஆஜரான எஸ்.ஆர்.சேகரிடம், போலீசார் சுமார் 7.30 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின்போது அவரிடம் ஏறத்தாழ 190 கேள்விகள் கேட்கப்பட்டதாக விசாரணை முடிந்த எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார். இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், விரைவில் அடுத்தடுத்து என பாஜக நிர்வாகிகள் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories