தமிழ்நாடு

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பா.ஜ.கவின் 10 ஆண்டுகால ஆட்சி : திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!

அறிவிக்கப்படாத அவசர நிலையை 10 ஆண்டுகளாக பா.ஜ.க பிரகடனப்படத்தி உள்ளது என திருச்சி சிவா எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பா.ஜ.கவின் 10 ஆண்டுகால ஆட்சி : திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 10 ஆண்­டு­க­ளாக நாட்­டில் அறி­விக்­கப்­ப­டாத அவ­சர நிலையை பார­திய ஜனதா கட்சி பிர­க­ட­னப் படுத்தி உள்­ள­தாக திமுக மாநி­லங்­க­ளவை குழு தலை­வர் திருச்சி சிவா டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தின் மைய அரங்­கில் குடி­ய­ர­சுத் தலை­வர் உரையாற்­றிய நிகழ்­வில் கலந்து கொண்ட பிறகு திமுக மாநிலங்க­ளவை குழு தலை­வர் திருச்சி சிவா டெல்­லி­யில் அவ­ரது இல்­லத்­தில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தார்.

அப்­போது பேசிய திருச்சி சிவா, அவ­சர நிலை குறித்து குடி­ய­ர­சுத் தலை­வர் என்று பேசி­யுள்­ளார். அவ­சர நிலை­யில் அதி­கம் பாதிக்கப்­பட்ட கட்சி திரா­விட முன்­னேற்ற கழ­கம் என­வும் அவ­சர நிலை நாட்­டில் பிர­க­ட­ னப்­ப­டுத்­த ப்­பட்­டது என்­பது மறைக்­கப்­பட வேண்­டி­ய­தில்லை என­வும் தெரி­வித்­தார்.

50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அறி­விக்­கப்­பட்ட அவ­ச­ர­நிலை அவை என்­றால், கடந்த 10 ஆண்­டு­க­ளாக நாட்­டில் அறி­விக்­கப்­ப­டாத அவசர நிலை செயல்­பாட்­டில் உள்­ள­தா­க­வும், மத்­திய அமைப்புகள் மூல­மாக எதிர்­கட்­சி­யி­னர், முக்­கிய அரசியல்வாதிகள் கைது செய்­யப்­ப­டு­வ­தும் சிறையில்அடைக்கப்ப­டு­வ­தும் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தும் என அறிவிக்­கப்­ப­டாத அவ­சர நிலையை பாஜக கடை­பி­டித்து வருவதாக குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

இனி­மேல் அவ­சர நிலை வரவே கூடாது என பார­திய ஜனதா கட்சி எண்­ணு­கி­றது என்­றால் அவ­சர நிலை­யின் போது செய்­யப்­பட்ட மாற்­றங்­களை மீண்­டும் திருத்­தம் செய்ய வேண்­டும் என­வும், குறிப்­பாக மாநில பட்­டி­ய­லில் இருந்த கல்­வியை அவ­சர நிலையின் போது பொதுப் பட்­டி­ய­லுக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும், ஏன் அதனை மீண்­டும் மாநில பட்­டி­ய­லுக்கு பார­திய ஜனதா கட்சி மாற்ற முன்­வ­ர­வில்லை? என­வும் கேள்வி எழுப்­பி­னார்.

மேலும் இன்று குடி­ய­ர­சுத் தலை­வர் உரை ஆளும் அர­சாங்­கம் எழுதிக் கொடுத்த உரை என­வும் அதி­லும் குறிப்­பாக பெரும்பான்மை பெற்ற அர­சாங்க ஒன்­றிய அரசு உள்­ளது என குடிய­ர­சுத் தலை­வர் குறிப்­பிட்­டது அதி­கம் சிரிப்பை ஏற்படுத்துவதாக கிண்­டல் அடித்­தார். அறுதி பெரும்­பான்மை கூட இல்­லாத கட்­சி­யாக பாஜக வெற்றி பெற்­று­விட்டு கூட்­ட­ணிக் கட்சிக­ளின் தய­வோடு ஆட்சி அமைத்­துள்ள அவர்­கள் பெரும்பான்மை பெற்ற கட்சி என நாடா­ளு­மன்­றத்­தில் சொல்கிறார்­கள் என­வும் திருச்சி சிவா குறிப்­பிட்­டார்.

banner

Related Stories

Related Stories