தமிழ்நாடு

”22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் விளையாட்டரங்கம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.

”22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் விளையாட்டரங்கம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும்.

2. டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

3. 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடியில் அமைக்கப்படும்.

4. இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் ஓடுபாதை ரூ.12 கோடியில் அமைக்கப்படும்.

5. SDAT நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வாளகங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும்.

6. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும்.

7. மதுரை மாட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.

8. அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை HOCKEY ஆடுகளம் அமைக்கப்படும்.

9. அனைத்து மாவட்ட விளையாட்டு வாளகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

10. SDATயின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2600 ஆக உயர்த்தப்படும். மேலும் உணவுப்படி ரூ.250லிருந்து 350 ஆகவும்,சீருடை மானியத் தொகை ரூ.4000 லிருந்து ரூ.6000 ஆகவும், உபகரண மானியத் தொகை ரூ.1000லிருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தப்படும்.

11. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) செயல்படுத்தப்படும்.

12. தமிழ்நாட்டு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூரில் Fencing, Badminton, Cycling, Archery மற்றும் Table Tennis ஆகிய விளையாட்டுக்களுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDATடென்னிஸ் விளையாட்டரங்கில் Tennis விளையாட்டிற்கும் வேளச்சேரியில் உள்ள S D A T A G B வளாகத்தில் Swimming மற்றும் Gymnastics விளையாட்டுக்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

13. சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் H o c k e y விளையாட்டு அரங்கில் H o c k e y விளையாட்டிற்கும் காங்சிபுரம் மாவட்டத்தில் கைப்பந்து மற்றும் கபாடி ஆகிய விளையாட்டுகளுக்கான கல்லூரி மாணவியர்களுக்கு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியும் (Sports Hostel of Excellence கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகள் கூடிய புதிய விளையாட்டு விடுதியும் (Sports Hostel) அமைக்கப்படும்.

14. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் 37 SDAT விளையாட்டு விடுதிகளுக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் ரூ.5 கோடியில் வழங்கப்படும்.

15. மேல்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை Hockey ஆடுகளத்துடன்கூடிய முதன்மை நிலை பயிற்சி மையம் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.

16. STDT ஆல் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கான மானிய ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாது விளையாட்டிற்கு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

17. புதிய இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்படும்.

18. அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் STAR அகாடமி உருவாக்கப்படும்.

19. SDAT கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களின் கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

20. தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூபாய் 14 இலட்சத்திலிருந்து ரூபாய் 28 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் 30 எண்ணிக்கையிலான நவீன Air Rifle ரக துப்பாக்கிகள் வாங்கிடவும் நிதி உதவி அளிக்கப்படும்.

21. 2024 ஆம் ஆண்டு முதல் நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு ரூபாய் 50 இலட்சம் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

22. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Champions Development Scheme) கீழ் ஒரு விளையாட்டு வீரருக்கு ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூபாய் 2 இலட்சத்திலிருந்து ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

23. தலைசிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் Expert Coaches-ஆக பணியமர்த்தப்படுவர்.

24. சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன்கூடிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories