தமிழ்நாடு

“தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்” - தமிழ் வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

“தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்” - தமிழ் வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி குறித்த அறிவிப்பு வருமாறு :

1. 2025-ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் 25-ம் நாளினை ’தமிழ்நாடு தியாகிகள்’ நாளாக கடைபிடிக்கப்படும்.

2. 2025-ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 3-ம் நாளினை ‘செம்மொழிநாள் விழா’-வாகக் கொண்டாப்படும்.

3. தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.

4. சிறந்த நூல்களை எழுதும் நூலாசிரியர், நூலைப் பதிப்பிக்கும் பதிப்பகத்திற்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

5. கவிஞர் முடியரசன்ர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 இலட்சம் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

6. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் புதிய விருது வழங்கப்படும்.

7. சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

8. டெல்லி தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தினைப் புனரமைக்க ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories