தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் நடந்த நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளது. நீட் தேர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்ட வந்ததில் இருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் கோரிக்கையை நாடே பிரதிபலித்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீட் தேர்வு பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்த தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பயனடையும் வகையில் இத்தேர்வு உள்ளது.

மாநிலங்கள் நுழைவுத் தேர்வு நடத்தும் முறையை மாற்றி தன்னிச்சையாக நீட் தேர்வை கொண்டு வந்தது கூட்டாட்சிக்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories