தமிழ்நாடு

75,800 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது : அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்!

75,800 மெட்ரிக் டன் உரம் மற்றும் இடுபொருட்கள் உள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

75,800 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது : அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மைத்துறையுடன் ஒருங்கிணைந்து உழவர் பெருமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்களைப் பொறுத்தவரை யூரியா 30,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 15,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 21,600 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உடனடித் தேவை எதிர்கொள்ளும் வகையில், டான்பெட் இருப்புக் கிட்டங்கிகளில் (Buffer Godowns) யூரியா 4,500 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 2,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 3.700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 5,400 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 16,300 மெட்ரிக் டன்கள் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறுமாறு கோட்டுக்கிள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories