தமிழ்நாடு

ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி : பா.ஜ.க நிர்வாகி கைது!

சென்னையில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி : பா.ஜ.க நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா பீவி. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியில் 2,347 சதுரடி நிலத்தை ஏழுமலை மற்றும் தனசேகர் ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.

இதையடுத்து கடந்த ஆண்டு இந்த நிலம் தொடர்பாக வில்லங்கம் சரிபார்த்துள்ளார். அப்போது இவரது பெயரில் போலியான ஆவணங்களைக் கொண்டு பத்மநாபன் என்பவர் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். பின்னர் இது குறித்து முகைதீன் பாத்திமா பீவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து பத்மநாபனை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்மநாபன் சோலைநகர் பா.ஜ.க ஒன்றிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories