தமிழ்நாடு

இனி 16 நாட்களில் சான்றிதழ் பெறலாம் : தமிழ்நாடு அரசின் அசத்தல் முடிவு குறித்த விவரம் என்ன ?

இனி 16 நாட்களில் சான்றிதழ் பெறலாம் : தமிழ்நாடு அரசின் அசத்தல் முடிவு குறித்த விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்ற வகையில் அதற்கான நடைமுறையை விரைவுபடுத்தி, இதனை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவும், ஒவ்வொரு தாலுகாவுக்கும், ஓர் சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு, உரிய நேரத்தில் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இனி 16 நாட்களில் சான்றிதழ் பெறலாம் : தமிழ்நாடு அரசின் அசத்தல் முடிவு குறித்த விவரம் என்ன ?

அதே நேரம் முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக்கும் வகையில், வெளி தாலுக்காவை சேர்ந்த அதிகாரிகளை பணியமர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தாலுக்காவுக்கும் உரிய அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அரசின் இ-சேவை மற்றும் பல்வேறு சேவைத்துறைகளின் கீழ் 26 வகையான சான்றுகள், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இனி 16 நாட்களில் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் வாரமும், உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு சான்று வழங்கப்படுவதை அரசின் வருவாய்த்துறை கண்காணிக்க உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories