தமிழ்நாடு

”தமிழகர்களை அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : டி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”தமிழகர்களை அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : டி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து தமிழர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமானப்படுத்தியுள்ளார் என டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செய்தி தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,"தை முதல் நாளை திருவள்ளுவர் தினமாக அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

ஆளுநருக்கு தமிழ்நாட்டின் பண்பாடும் பழக்க வழக்கங்கள் பற்றி தெரியவில்லை. அதேபோல் திருவள்ளுவர் குறித்தும் அவருக்கு தெரியவில்லை. திருவள்ளுவருக்கும் காவி உடை அணிவித்து, இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார். இது உலக முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.

திருவள்ளுவருக்கும் ஆளுநருக்கும் எந்த தொடர்பு இல்லை, வேண்டும் என்றே திட்டமிட்டு பிரமதர் மோடி தொடங்கியதை, ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் ஆளுநரின் செயலை தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.

திருக்குறளில் ஒரு குறள் கூட ஆளுநருக்கு தெரியாது ஆளுநரின் செயல்பாடுகளில் அவரின் அறியாமை வெளிப்படுகிறது. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அவமானமாகும்.தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த காரணத்தால் தான் ,வடமாநில பிரச்சாரங்களில் தமிழகத்தை பற்றி விமர்சித்து பிரதமர் மோடி பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories