தமிழ்நாடு

”பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் JNU வெற்றி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக JNU வெற்றி அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் JNU வெற்றி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 22 ஆம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கம் (SFI),அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) ஆகிய மாணவர் அமைப்புகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இடதுசாரி கூட்டணியை எதிர்த்து பா.ஜ.கவின் ABVP மாணவர் அமைப்பு போட்டியிட்டது.

கடந்த 22 ஆம் தேதி பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் நான்கு இடங்களிலும் இடதுசாரி மாணவர் அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனஞ்சய் பாய் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் நேற்று இரவு முழுவதும் கொண்டாடினர். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டமாக இந்த JNU பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக JNU வெற்றி அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.

ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் Swati Singh அவர்களின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், JNU மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர். வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories