தமிழ்நாடு

“வாக்குறுதி பற்றி அண்ணாமலை பேசலாமா ? - மோடி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?” : வெளுத்து வாங்கிய கனிமொழி MP!

பாஜக சிபி.ஐ மூலம் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறது என திமுக துணை பொது செயலாளர் கனிமொழி சாடியுள்ளார்.

“வாக்குறுதி பற்றி அண்ணாமலை பேசலாமா ? - மோடி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?” : வெளுத்து வாங்கிய கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2024 மக்களவை தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில், 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டு மக்களின் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தி.மு.க சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர்.

இந்த நிலையில், இன்று வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்வில், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர். தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.

“வாக்குறுதி பற்றி அண்ணாமலை பேசலாமா ? - மோடி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?” : வெளுத்து வாங்கிய கனிமொழி MP!

பின்னர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் கருத்தை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க, பல மாவட்டங்களுக்கு சென்று கருத்துக்களை கேட்டு வருகிறோம். மாணவர்கள், தொழிலாளிகள் உள்ளிட்டோர்களிடம் கருத்து கேட்கிறோம். இதனை ஒருங்கிணைத்து, தேர்தல் அறிக்கையை உருவாக்குவோம்.

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். அதே போல் பிரதம்ர் மோடியும் அனைவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் இருக்கும் என்றார். அதற்காக காத்திருக்கிறோம். தேர்தல் பத்திரம் செல்லாது எனவும் வெளிப்படைதன்மை வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தி.மு.க பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு எல்லாதுறைகளிலும் பின் நோக்கி தான் சென்றது. தற்போது, கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் திமுக ஆட்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பாஜக சி.பி.ஐ மூலம் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. டெல்லியில் விவசாயிகளை தீவிரவாதிகளை ஒடுக்குவதை போல், ஒடுக்குகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல், கைது நடவடிக்கையை செய்கின்றனர். இத்தகைய சர்வதிகார ஆட்சி செய்யும் பாஜகவுக்கு முடிவுரை எழுதும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories